பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நினைவுக் குமிழிகள்:4 துணைவேந்தர். அவர் உள்ளத்தில் அந்தர்யாமியாக இருக்கும் கோவிந்தராஜ சுவாமி கோவிந்தராஜுலு: நாடு வாயில் பேசுகின்றார்: "மிஸ்டர் ரெட்டியார், உங்கள் துாய்மையான உள்ளத்தையும் தியாக உணர்வையும் இப்பொழுது புரிந்து கொண்டேன். மனம் கலங்கற்க. நேற்றைய குறிப்பு நடைமுறைக்கு வராது; அதன் உயிரை இன்று நீக்கிவிட்டீர்கள். மகிழ்ச்சியுடன் திரும்புங்கள். பத்து மணிக்குக் கல்லூரிக்கு வந்து சேருங்கள்' என்று நெகிழ்ச்சியுடன் விடை கொடுத்தனுப்பினார். உலையா முயற்சி களைகணா ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே:-உலகு அறியப் பால்முளை தின்று மறலி உயிாகுடித்த கான்முளையே போலும் கரி". என்ற குமரகுருபர அடிகளின் திருமொழியைச் சிந்தித்த வண்ணம் இல்லம் திரும்பினேன். 6. நீதிநெறி விளக்கம்-50