பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-145 19, ஆராய்ச்சிக்குப் பதிவுபெற மேற்கொண்ட தந்திரம் திருப்பூர் திரு கே. ஆர். சுப்பிரமணியம் சொன்ன சோதிடப் பலன் எனக்கு ஊக்கம் அளித்தது. அவர் என் இயல்பை நன்கு அறிந்து சொன்னாரா, அல்லது கோள் களின் நிலைகளைக் கண்டு சொன்னாரா என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம். நன்கு அநுபவம் மிக்க சோதிடர்கள் தீய பலன்கள் தேரிந்தாலும் சொல்ல மாட் டார்கள். அவற்றை வளவள வென்று மழுப்பிக் குழப்பி விடுவார்கள். ஒரு சோதிடர் தீய பலன்களையே சொல்லக் கூடாது என்பது சோதிடர்களின் மரபு என்று ஓர் இலக்கணத்தையும் குறிப்பிட்டார் திரு. சுப்பிரமணியம். சோதிடம் பார்ப்பவர்கள் ஏதோ கவலையின் காரணத் தால்தான் பார்ப்பார்கள்; எந்தக் கவலையும் நோக்கமும் இல்லாதவர்கள் அப் பக்கத்தில் தலையை வைத்துக்கூடப் படுப்பதில்லை. தீய பலனைச் சொன்னால் அந்தக் கவலை மேன்மேலும் அதிகரிக்கும் என்பது உளவியல் உண்மை. இதனைக் கருதியே சோதிடர்கள் எந்தவிதமான தீய பலன்கள் கோள்களின் நிலையை அனுசரித்து வாய்க்கக் கூடியனவாக் இருப்பினும் அவற்றை எடுத்துக்காட்டாது மழுப்பி விடுவார்கள். நான் சிறு வயதில் படித்த, வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்து ஆய நூலகத்தும் இல்லை; நினைப்பதுஎனக் கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல்நெஞ்சே!மெய் விண் உறுவார்க்கு இல்லை; விதி' 1. நல்வழி-37 நி-1ெ