பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நினைவுக் குமிழிகள்-4 என்ற பாடல் அடிக்கடி நினைவிற்கு வரும். சற்றுவளர்ந்து விவரம் அறிந்த பிறகு, குறிப்பாகச் சமயக் கருத்துகளில் சிறிது தெளிவு ஏற்பட்ட பிறகு வினை' என இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பது பிராரத்தம் (நுகர்வினை) என் பதை அறிய முடிந்தது. பிராரத்தம் அநுபவித்தே தீர வேண்டியது என்பது சமய நூல்கள் உணர்த்தும் உண்மை. ஆனால் இச்சமயங்களில் குமரகுருபரரின் எல்லாம் நீதிநெறி விளக்கத்தில் படித்த, உலையா முயற்சி களைகணா ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே-உலகு அறியப் பால்முளை தின்று மறலி உயிர்குடித்த கான்முளையே சாலும் கரி.” என்ற பாடலும் ஒளிகாட்டும். ஆதலால் பி எச்.டி. பட்டம் பெறுவதில் என் முயற்சியைக் கைவிடவில்லை. மகப்பேறு இல்லாத மங்கையொருத்தி அரசமரத்துப் பிள்ளையாரை விடாது சுற்றி வருவது போல துணைவேந்தரைச் சுற்றிச் சுற்றி வருவதை நிறுத்தவில்லை. அடிக்கடி வழக்கம் போல் காலை ஏழு அல்லது ஏழரை மணிக்கு அவர் திருமாளிகை சென்று அவர் தரிசனம் பெற்று வருவது உண்டு. போகும் போதெல்லாம் என் கோரிக்கையைச் சொல்வதுமில்லை. பேச்சுவாக்கில் இதைச் சொல்லாதும் விடுவதில்லை. "தமிழ்ப் புலம் (Tamil Faculy) இல்லை; அதனால் ஆய்வு செய்வதற்கு வழி இல்லை' என்று சொல்லும்போது ஏதாவது ஒரு விதி அல்லது மரபைக் காட்டி அவரை மடக்குவேன். 2, நீதிநெறி விளக்கம்-50