பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக்குப் பதிவுபெற மேற்கொண்ட தந்திரம் 147 "சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலன் இல்லாத இந்தித் துறையில் இங்குத் தமிழ்த் துறையில் ஒரே ஒரு விரிவுரையாளர் இருப்பது போல் ஒரேஒரு விரிவுரையாளர் இருந்தார். அவர் பெயர் எஸ். சங்கரராஜ நாயுடு. அப் பல்கலைக் கழகத்தில் நேர்முகமாக எம். ஏ. பயிலுவிக்கும் வசதி செய்யப்படாவிட்டாலும் அப் பல்கலைக் கழகத் திற்குட்பட்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ., (தமிழ்) கற்பிக்கப்பெற்று வருவதால் அப்பல்கலைக் கழகத்தில் எம். ஏ. இருப்பதாகப் (தமிழ்ப் புலம் இருப்ப தாகப்) பொருள், தமிழ்த்துறைப் பேராசிரியரான திரு. ரா. பி. சேதுபிள்ளையை வழிகாட்டியாகக் கொண்டு எஸ். சங்கரராஜு நாயுடு பிஎச்.டி.க்குப் பதிவு செய்து கொண்டார், திரு. சேதுபிள்ளைக்கு இந்தி தெரியாது; எழுத்து கூட தெரியுமா என்பது ஐயமே. அவருக்குப் பிஎச்.டி. பட்டம் கூட இல்லை. இந் நிலையில் அப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறையில் பி எச்.டிக்குப் பதிவு செய்து கொள்ள ஓர் இந்தி விரிவுரையாளருக்கு வாய்ப்பு அளித்தது.” 'இத்தகைய விதி இப் பல்கலைக் கழகத்திற்குப் பொருந்தாதா? இங்கு நான் தமிழ்த் துறையில் (புலன் இல்லாத) ஒரு தமிழ் விரிவுரையாளராக இருக்கின்றேன். வடமொழியில் புலன் உண்டு-எம்.ஏ., பி எச்.டிக்கு வாய்ப்பு இருப்பதால் துணைப்பேராசிரியர் டாக்டர் வி.வரதாச்சாரியை வழிகாட்டியாகக் கொண்டு நான் ஏன் பிஎச். டிக்குப் பதிவு செய்து கொள்ளக்கூடாது? டாக்டர் வி. வரதாச்சாரி ஒரு வைணவர். நாலாயிரப் பிரபந்தத்தில் அவருக்கு நல்ல பயிற்சியும் உண்டு; இந்தியே தெரியாத ஒரு தமிழ்ப் பேராசிரியர் கம்ப ராமாயணம்-துளசி ராமாயணம் : ஒர் ஒப்பீடு' என்ற பொருளை ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டு பிஎச். டி.க்கு ஆய்வு செய்பவருக்கு வழிகாட்டியாக இருக்கும்போது, நாலா யிரத்தில் நன்கு பயிற்சியுள்ள ஒரு வட மொழித் துறைத்