பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நினைவுக் குமிழிகள்-4 துணைப் பேராசிரியர் ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வாரின் தத்துவம்’ என்ற தலைப்பில் ஆயும் எனக்கு (புலன் இல்லாத தமிழ்த்துறையில் விரிவுரையாள ராக இருக்கும் ஒருவருக்கு) ஏன் வழிகாட்டியாக இருக்கக் கூடாது?’ என்றேன். அதற்கு அவர் சொன்னார்: "சேது பிள்ளைக்குத் தமிழ்த தெரியும்; சங்கரராஜு நாயுடுக்கு இந்தி தெரியும். இருவரும் கலந்து கொண்டு ஒப்பிட்டு ஆய்வு செய்யலா மல்லவா? அதனால் தான் இந்த வசதியை அப்பல்கலைக் கழகம் சங்கரராஜு நாயுடுக்கு அளித்தது.' நான் சொன்னேன் : 'எனக்கும் வழி காட்டியாக இருக்கும் டாக்டர் வி. வரதாச்சாரியாருக்கும் தமிழ் தெரியும். இந்தி தெரியாத ஒரு தமிழ்ப் பேராசிரியர் இந்தி விரிவுரையாளர் ஒருவருக்கு வழிகாட்டியாக இருக்கும் போது தமிழ் நன்கு தெரிந்த ஒரு வடமொழித் துணைப் பேராசிரியர் ஒரு தமிழ் விரிவுரையாளருக்கு வழி காட்டியாக இருக்கலாமல்லவா? அதுவும் வைணவ சம்பிரதாயத்தில் ஊறிய ஒருவர் வைணவ தத்துவம் பற்றிய ஆய்வுப் பொருளை ஆயும் ஒரு தமிழ் விரிவுரை யாளருக்கு வழிகாட்டியாக இருப்பது மிகவும் பொருத்த மல்லவா? தவிர, இரண்டு துறை சேர்ந்து ஆராயும் முறைக்கு U.C.C.யும் அதிக ஆதரவு தருகின்ற கால மல்லவா?’’ வகையாக மாட்டிக் கொண்டார். துணைவேந்தர், பேச வாய் எழவில்லை, ஏதாவது சொல்ல வேண்டுமே. என்று சொன்னார்: சென் ைப் பல்ககைக் கழகத்தில் நிறையப் பால் உற்பத்தியாகியுள்ளது. சிறிது தண்ணிர் கலப்பு ஏற்பட்டால் ஒன்றும் தெரியாது. இங்குப் பாலே உற்பத்தியாகவில்லை. முதலில் தண்ணீர் ஊற்றினால் என்ன ஆகும்? நீங்களே சொல்லுங்கள்!' என்று கிரித்துக்