பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக்குப் பதிவுபெற மேற்கொண்ட தந்திரம் 149 கொண்டே சொல்லி இருவர் வாதத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். துணைவேந்தர் பேச்சில் சதுரர். யார் எந்தச் சலுகையை வேண்டிச் சென்றாலும் அழகாகப் பேசி எதிர் மறை முடிவினையும் புன்முறுவலோடு ஏற்றுக் கொள்ளும் படி செய்து விடுவார் சலுகையை நாடிச் சென்றவர்களும் மன நிறைவுடன் திரும்பி விடுவர். என் சம்பளம் பற்றிப் பல முறை கேட்கும் போதெல்லாம் இப்படித்தான் எதை எதையோ பேசி பேச்சை இதிகாசச் சுவையாக்கி நயமாக அனுப்பிவிடுவார்: நான் காண்டுக் காலத்திலும் என் சம்பள தட்டத்தை ஈடுசெய்து கொள்ள முடியாது போய் விட்டது. ஆகுவ தாகுங் காலத் தழிவதும் அழித்து சிந்திப் போகுவ தயலே நின்று போற்றினும் போதல் செய்யும்.” என்று கும்ப கருணன் வீடணனிடம் பேசும் பேச்சாகக் கம்பநாடனின் வாக்கை நினைந்து கொண்டு வாளா இருந்து விடுவேன். இப்போது பிஎச். டி.க்குப் பதிவு செய்து கொள்ள வேண்டிய போதெல்லாம் இதே கதை தான். நான் என்ன செய்ய முடியும்? அவர் ஒரு பல்கலைக் கழகத் துணை வேந்தர் . நான் புலமே இல்லாத தமிழ்த் துறையின் ஒரு விரிவுரையாளர். ஒன்று என் நினைவுக்கு வந்தது. ஜான்சனைப் பற்றி கோல்ட்ஸ்மித் சொல்வாராம்: அவருடைய (ஜான்சனுடைய) துப்பாக்கி ? குண்டுகளை அனுப்பத் தவறினால் அவர் (ஜான்சன்) துப்பாக்கியைத் திருப்பிக் கொண்டு அதன் அடிக்கட்டையால் அடிப்பார்.’’ «Tairussrā (If his pistol misses fire, he would knock at 3. கம்ப. யுத்த. கும்பகருணன் வதை-166