பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5Ꮾ நினைவுக் குமிழிகள்-சி its Butt's end) இதை நினைத்துக் கொண்டேன். இருந் தாலும் நானும் ஏதாவது சொல்ல வேண்டுமல்லவா? "ஐயா, தாங்கள் இவ்வாறெல்லாம் பேசி என்னை மடக்கி பிஎச். டி.க்குப் பதிவு செய்து கொள்ள மறுத்தால் நான் இனி கும்பகோணம் வழியைக் கையாள வேண்டியதுதான்' என்று சொல்லி வைத்தேன். கும்பகோணம் வழி என்றால்?’ என்று வினவினார். 'சென்னையிலிருந்த தங்கட்கு இது நன்கு தெரியும். இப்போது உடனே நினைவிற்கு வராவிடினும் சிந்தித்துப் பார்த்தால் தெரியாமற் போகாது. ஒர் ஆறு திங்களில் இதைத் தங்கட்குச் செயலில் காட்டுவேன்' என்று சொல்லி நானும் என் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டேன், அவரும் அதனை வற்புறுத்தாமல் அந்த அளவிற்கு விட்டு விட்டார் சிரித்துக் கொண்டே. நானும் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பி விட்டேன். என் வயதிற்கும் புலமைக்கும் அடக்கமான பண்பிற்கும் அவர் மதிப்பு தருபவராதலால் சற்றுத் துணிவுடன், அவரிடம் பழகும் வாய்ப்பு இருந்தது என்பதால் இவ்விதமாகவெல்லாம் அவரிட்ம் பேச முடிந்தது. - குமிழி-178 20. மூன்றாண்டுத் திட்டகால ஊதியம்பெறல் 15ான் திருப்பதி வந்து பணியேற்றுக் கொண்டதில் திங்கள் தோறும் ரூ 15:- இழப்பு. இதை நான் 1960ஏப்பிரலில் சென்னையில் ஆர்ம்ஸ் சாலையிலுள்ள பேராசிரியர் எஸ். கோவிந்த ராஜுலுவின் இல்லத்தில் தமிழ் விரிவுரையாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவின் முன்னர் நடை பெற்ற பேட்டியில், குறிப்பாக என் நியமனம் பற்றி ஊகிக்க முடிந்ததால், அப்பொழுதே.