பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாண்டுத்திட்டக் கால ஊதியம் பெறல் 夏5直 இழப்பைப் பற்றிய பிரச்சினையை எழுப்பினேன். வாங்கிய ஊதியத்தில் எந்த வித இழப்புமின்றி நியமனம் பெற்றால் நலம் என்பதைக் குறிப்பிட்டேன். நியமனக் குழுவின் கூட்டக் குறிப்பிலேயே ஊதியம் பற்றிய குறிப்பைப் பதிவு செய்திருந்தால் பின்னால் எந்த வித இழப்பின்றி ஊதியம் கிடைத்திருக்கும். விண்ணப்பம் செய்த மனிதர் இதனை வற்புறுத்த முடியாது. பெரும் பாலும் நியமனக் குழு இதனைச் சிந்திப்பதேயில்லை. வேலையை முடிந்ததும் தேநீர் அருந்தி விரைவாக வீடு திரும்புவதையே முக்கிய பணியாகக் கொள்ளுகின்றனர். பதவிக்கு விண்ணப்பிப்பவர்களும் இதனைத் தம் விண்ணப்பதில் குறிப்பிடுவதில்லை. பல்கலைக் கழகமே வரையறுத்த விண்ணப்ப அமைப்பில் இதற்கு இடம் விட்டு வைப்பதில்லை. "வாங்கிய சம்பளம்” என்ற இடத்தில் வாங்கிய சம்பளத்தையும் சம்பள ஏற்றப்படி முறையுமே (Scale of pay) குறிப்பிட்டு அத்துடன் விட்டுவிடுகின்றனர். கம்பெனி விளம்பரத்தில் எதிர்பார்க்கும் ஊதியம்’ என்றி ருப்பது போல் பல்கலைக் கழக விண்ணப்ப அமைப்பிலும் இப்படி ஒர் இடம் அமைத்திருப்பின் இதுபற்றிய ஒர் எண்ணம் குழுவின் கவனத்தைப் பெற்றிருக்கும். அஃது இல்லாமையால் நியமனக் குழுவும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்பாவி ஆசிரியர்களுக்கு இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது, இன்னும் ஏதாவது சொல்ல விரும்பினால் என்றாவது ஓர் இடம் இருந்தாலா வது அவ்விடத்திலாவது விண்ணப்பிப்போர் சம்பளம் பற்றித் தெளிவாகக் குறிப்பிடலாம்; அப்படியும் இடம் இருப்பதில்லை. நான் திருப்பதிக்கு விண்ணப்பிக்கும்போது எத்தகைய விண்ணப்ப பாரமும் இல்லை. எல்லாத் தகவல்களும் அடங்கிய விண்ணப்பத்தைச் சாதாரண தாளில்தான் தட்டச்சு செய்துதான் அனுப்பினேன். வாங்கின. ஊதியத்தைப் பற்றிய குறிப்பு அதில் தந்தேனா?