பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I・5芝 நினைவுக் குமிழிகள்-4 இல்லையா? என்ற நினைவு இல்லை. ஆனால் பேட்டி நடைபெற்றபோது ஊதியப் பிரச்சினையை எழுப்பினேன். என் நியமனம் பற்றிய குறிப்பு ஊகமேயன்றி தெளிவில்லை யாதலால் அதைப்பற்றி அதிகமாக வற்புறுத்த இயல வில்லை. தாங்கள் நியமனம் பெற்று பணியில் சேர்ந்த பிறகு பதிவாளர் இதனைக் கவனிப்பார்' என்று துணை வேந்தரும் சொல்லிவிட்டார். நான் திருப்பதியில் சேர்ந்து சில நாட்களுக்குப் பின் பதிவாளரைச் சந்தித்து முன் வாங்கிய ஊதியத்திற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டினேன். அவர் நியமனக் குழுவின் நடவடிக்கைக் குறிப்பைப் பார்த்துவிட்டு அதில் இதுபற்றி ஒன்றும் குறிப்பிடப் பெறாததால் துணைவேந்தரைப் பார்க்குமாறுக் கூறி விட்டார். பல தடவை துணைவேந்தரைப் பார்க்கும் போதெல்லாம் நினைவூட்டினேன். பார்க்கலாம்' என்று பதிலிறுத்தாரேயன்றி தரும் குறிப்பு ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை ம்திப்புக்குரிய முதலமைச்சர் காமராசர் ஏதாவது சலுகை யாருக்காவது வழங்க மனமில்லாவிட்டால் இப்படித்தான் ஆகட்டும் பார்க் கலாம்' என்று சொல்லியனுப்பிவிடுவதாகக் கேள்வியுற்ற துண்டு. அந்தக் கொள்கையையே இவரும் கடைப்பிடிப்ப தாக நினைத்துக் கொண்டு வாளா இருந்து விட்டேன். ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானே! என்னுடன் வேதியியல் விரிவுரையாளர் ஒருவர் நியமனம் பெற்றார். அவர் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. சி. எஸ். இராமய்யாவுக் வேண்டியவர்; அவர் மூலம் முயன்று ரூ 50| இரண்டுபடி ஏற்றம் பெற்றார். பதிவாளர், துணைவேந்தர் இவர்களைத் தவிர வேறு எவரையும் பார்க்க விரும்பவில்லை. இவர்களிருவருமே பொறுப்பானவர்கள்; இவர்கள் கவனிக்காவிடில் எனக்கு ஊழ் இல்லைஎன்பது தெளிவு. இதனால்,