பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாண்டுத்திட்டக் கால ஊதியம் பெறல் I 53 எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெய்தும் போதல்லால்; கண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குல்ே ஆம்காலம் ஆகும் அவர்க்கும்.' என்ற ஒளவைப்பாட்டியின் திருமொழியை எண்ணி அமைதி கொண்டு விடுவேன். பலரைப் பார்ப்பதால் காரியம் கைக்கூடாது; நம் மதிப்புதான் பாதிக்கப்படும் என்ற உண்மையை நன்கு அறிவேன். திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை' என்ற உண்மை என் வாழ்நாள் முழுவதும் ஒளி காட்டிவருகின்றது. பல்கலைக் கழகம் 1954இல் தொடங்கப் பெற்றது. தொடக்கக் காலத்தில் தகுதியற்றவர்கள் பலர் பல்கலைக் கழகத் துறைகளில் இடம் பிடித்துக் கொண்டனர்.பல்வேறு பெரியார்களின் பரிந்துரைகளின் விளைவாக இந்நிலை ஏற்பட்டது. இவர்கள் ஒவ்வொரு நிலையிலும் பரிந்துரை களின் பேரிலேயே பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டு. வந்ததில் வியப்பில்லை. 1962-இல் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட ஊதிய விகிதங்கள் நடைமுறைக்கு வந்தன என்பதாக நினைவு. புதிதாக நியமனம் பெறுபவர் கள் இந்த நன்மைகளை அடைந்தனர். விரிவுரையாளர்கள் கூட பிஎச். டி. பெறவேண்டும் என்ற நிலையை மெதுவாக நடை முறைக்குக் கொணர்ந்தனர். சில விரிவுரையாளர்கள் இத்திட்டத்திற்கு வரத் தகுதியற்றவர்களாக இருந்தும் உள்ளுர் செல்வாக்காலும் சாதியின் பலத்தாலும் சலுகை கள் பெறமுடிந்தது. அவர்கள் பணியாற்றும் துறைகளில் பேராசிரியரோ, துணைப் பேராசிரியரோ இருந்தால் அவர், பதிவாளர், துணைவேந்தர் முதல்வர் அடங்கிய &6pool–650p (Screening Committee) stgärp (5(1933, 7&60so அமைத்துக் கொண்டு உரிய விரிவுரையாளர்களைப் பேட்டிக்கு வரச்செய்து 250-500 திட்டத்தில் உள்ளவர் 1. நல்வழி-4