பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莎程 நினைவுக் குமிழிகள்-சி களை 400-800 திட்டத்திற்கு மாற்றினர். பஞ்சப்படி இத்திட்டத்தில் ஐக்கியமாயிற்று. இது நடை முறைக்கு. வந்த சமயம் பஞ்சப்படிக்கு வகை இல்லை. தமிழ்த்துறையில் யான் ஒருவனே இருந்த படியால் சல்லடைக்குழு அமைத்துக்கொள்ள வழி இல்லாதிருந்தது. சென்னையிலிருந்து டாக்டர் மு. வரதராசன் போன்ற பேராசிரியரைக் கொண்டு குழு அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி ஒருவரைத் தருவித்தால் அவருக்குப் பயணப்படி தரவேண்டுமே. துணைவேந்தர் நாயுடு மிகவும் சிக்கனக்காரர் என்பது நாடறிந்த உண்மை. நான் அவர் சாதியைச் சேர்ந்தவனாக இருந்திருத்தால் குழு அமைத்து புதிய சம்பளத்திட்டத்தில் வைத்திருந்திருப்பார். என்னிடம் துணைவேந்தர் நல்ல மதிப்பு வைத்திருந்த போதிலும், பல்கலைக் கழகம் என்ஒருவன்பொருட்டுப்பயணப்படி தந்து சென்னையிலிருந்து ஒருவரைத் தருவிக்க விரும்பவில்லை. "கம்புக்குக் களை வெட்ட ஆட்கள் வரும்போது தம்பிக்கும் பெண்பார்த்துக் கொள்ளலாம்’ என்ற கொள்கையை என் பொருட்டுக் கடைப்பிடிக்க எண்ணியிருந்தார் என்பதை அவர் பேச்சிலிருந்து ஊகித்து அறிந்து கொண்டேன். டாக்டர் மு. வரதராசன்தான் பாடதிட்டக்குழுவிலும் (Board of Studies), பல்கலைக் கழகப் பேரவையிலும் (Senate) உறுப்பினராக இருந்தார். எல்லாத் துறைப் பாடத்திட்டக் குழுக்களும் ஒரே நாளில் கூடும் மரபை ஏற்படுத்தியிருந்தார். குழுக் கூட்டங்கள் தொடங்குவதற்கு. முன்னர் எல்லாக் குழு உறுப்பினர்களையும் ஓரிடத்தில் கூடச் செய்து அரைமணி நேரம் உரையாற்றுவார் துணை வேந்தர். பாடத்திட்டக் குழு ஆண்டிற்கு ஒருமுறை கூடும். பேரவை ஆண்டிற்கு இரு முறை கூடும். பேரவைக் கூட்டத் திற்கு முதல் நாள் பல்கலைக் கழக ஆட்சிக்குள் அடங்கிய முதல்வர்கள் அடங்கியகூட்டம்.நடைபெறும்; துணைவேந்தர் இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி முதல்வர்.