பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாண்டுத்திட்டக் கால ஊதியம் பெறல் 夏55 களிடம் கலந்து ஆலோசிப்பார். அடுத்த நாள் காலையில் sevest -g3avrrorsogorše (up (Academic Council) Gat -L-gpuh மாலையில் பேரவைக்கூட்டமும் நடைபெறும். இக் கூட்டங் கள் நடைபெறும் அன்று காலையில் டாக்டர் மு. வரதராச னுக்கு ஒய்வு இருப்பினும் துணைவேந்தருக்கு ஓய்வு இருப்ப தில்லை, இதனால் இக்கூட்டங்கள் நடைபெறும் அன்று சல்லடைக் குழுக்கூட்டம் அமைப்பதற்கு வாய்ப்பு இருப்ப தில்லை. ஆகவே, பாடத்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் நாளன்று பிற்பகலில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கு இது பற்றிய நினைவே இராது. முன் கூட்டியே டாக்டர் மு. வரதராசனுக்கு இதுபற்றி எழுதவேண்டும். துணை வேந்தர், முதல்வர், பதிவாளர் இவர்களையும் முன் கூட்டியே சந்தித்து இக்கூட்டம் அமைப்பது பற்றி நினைவு படுத்தவேண்டும். இந்த மூவர்களையும் செவ்வியறிந்து பார்த்துப் பேசுவதென்பது நடைமுறையில் மிகச் சிரமம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. கண்ணன் கோவர்த்தன மலையை அநாயாசமாகத் தூக்கி நிறுத்தினான் என்பதைக் கதைகளில் படித்திருக்கின்றோம். பெரிய பயில்வான்கள் பெருஞ்சுமையை மிகச்சிரமத்துடன் துரக்குவதை நேரில் பார்த்திருக்கின்றோம். பயில்வான் செயலைவிட இந்தச் சல்லடைக் குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது மிகச் சிரமமாக இருந்தது. எப்படியோ கூட்டமும் கூடியது: எனக்கும் 400-800 ஊதியத்திட்டம் வழங்குவதென்றும் முடிவு செய்யப் பெற்றது, இதனால் நான் வழக்கமாகப் பெற்றுவந்த ஊதியத்தில் பதினொரு ரூபாய் உயர்ந்தது. திங்கள் தோறும் ரூ 153| இழப்பி லிருந்த எனக்கு ரூ.11) ஈடுசெய்யப் பெற்றது. இத்திட்டம் வருகிறதென்று நினைத்தே பலமுறை வேண்டியும் ரூ.153|க்கு ஈடு செய்யச் சரியாகச் செவி சாய்க்காது இருந்தார் போலும்! 1963-மார்ச்சில் என நினைக்கின்றேன். ஒரு நாள் துணைவேந்தரைச் சந்தித்து இந்தப் புதியத்திட்டத்தாலும்