பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互あ6 நினைவுக் குமிழிகள்.4 என் இழப்பு ஈடுசெய்யப் பெறவில்லை என்று விளக்கினேன் அவரும் மனமிரங்கி முதல்வர் மூலம் கடிதம் எழுதுமாறு பணித்தார். அப்போது முதல்வராக இருந்தவர் பேராசிரியர் டி. ஏ. புருஷோத்தம் என்பவர். கடிதத்தைத் தட்டச்சு செய்து ஓர் உறையில் போட்டு அவரிடம் தந்தேன். அவர் அதை வாங்கி வைத்துக் கொண்டார். இப்போது இஃது உறுதியாகக் கவனிக்க்ப் பெற்று எனக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்பினேன். மனநிறை வுடன் கோடை விடுமுறைக்குக் காரைக்குடி சென்றேன். கோடை விடுமுறை கழித்து காரைக்குடியிலிருந்து திருப்பதி திரும்பினேன். மிக்க ஆவலுடன் பதிவாளர் அலுவலகத்தில் சம்பள இழப்பு ஈடுசெய்வதுபற்றி நான் தந்த கடிதத்தின் முடிவைப்பற்றி விசாரித்தேன். கடிதம் வரவில்லையே' என்று கூறிய செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது. முதல்வரைச் சந்தித்து கடிதம் பற்றிக் கேட்டேன். அவர் அனுப்பிவிட்டதாகக் கூறினார். கடிதம் வரவில்லையே' என்று பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக் கிறார்கள் என்றேன். நான் அனுப்பினது எப்படித் தவறி இருக்கும்?' என்று என்னையே திருப்பி வினவினார் . 'ஏழுமலையானுக்கே வெளிச்சம்!” என்று மறுமொழி கூறினேன். அவர் இலேசாக நகைத்தார். ஒப்புக்கு நானும் நகைத்தேன். ஆனால் என் நகைப்புக்குக் கீழ் அடிநாதமாக இருந்த நெஞ்சுக் குமுறலை அவர் எப்படி அறிவார்? என் குமுறல் யாரை என்ன செய்ய முடியும்? இன்னும் ஓரிரண்டு திங்களில் இவரது பதவி ஒப்பந்தக் காலமும் நிறைவெய்துகின்றது என்பதை அறிந்தேன். இந்த ஏக்கத்தால்தான் என் கடிதத்தை மறந்தாரோ என்று சிந்திக்க முடிந்தது. கூழுக்கு உப்பில்லை என்பார் கவலை யும் பாலுக்குச் சருக்கரை இல்லை என்பார் கவலையும் ஒன்றுதானே!' என்று சும்மாவா சொல்வி வைத்தார்கள்? என் கவலையை என் முகத்தில் கண்ட முதல்வர் சிறிது