பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாண்டுத் திட்டக் கால ஊதியம் பெறல் 157 கவலை கொண்டு தன் மேசையின் இழு அறைகளைத் (Drawars) துழாவினார். கடிதம் கிடைக்கவில்லை! முதல்வர் மேசைமீது எல்லாம் குவியலாகக் கிடக்கும். இந்தக் குவியலை நான் ஆயட்டுமா?’ என்று கேட்க, அவரும் ஒப்புக் கொண்டார். மேசையின் மீது துரசுகள் படிந்த கடிதங்கள் நிறைந்த தடடம் (Tray) ஒன்று இருந்தது. அக்கடிதங்களை ஒவ்வொன்றாகச் சோதித் தேன்; பலன் இல்லை. தட்டத்தைத் தூக்கினேன்; அதன் அடியில் என் கடிதம் உறையுடன் அழுந்திக் கிடந்தது: அதை எடுத்துக் காட்டினேன். வியப்பு கலந்த வருத்தம் அவர் முகத்தில் நிழலிடுவது தென்பட்டது. அவரும் வாளா இருந்தார். இனி இக்கடித்தை அனுப்பவேண்டாம்; என் விதிப்படி ஆகட்டும்?' என்று கூறி அக்கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டேன். இனி, சம்பளம்பற்றி எந்தவித முயற்சியும் செய்வதில்லை என உறுதி கொண்டேன். ஈட்டும் பொருள்முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம்." என்ற ஒளவைப் பாட்டியின் பொன் மொழியைச் சிந்தித்து வாளா இருந்து விட்டேன். இப்படித்தான் என் வாழ்வில் வரவேண்டியது கூடவராமல் போகின்றது. 2. நல்வழி-8