பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-177 21. கும்பகோண வழி பி.எச். டிக்குப் பதிவு பெறுவதற்கு மறுத்த துணைவேந்தரிடம் கும்பகோணம் வழியைக் கைவாள வேண்டியதுதான்' என்று சொல்லி வந்து விட்டோமே. இனிது என்ன செய்வது?’ என்று என் மனம் உழன்று கொண்டிருந்தது; தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டும் இருந்தது. 1942-இல் சந்தனையில் எழுந்த இந்த டாக்டர் பட்ட ஆசை’ இது காறும் என்னைப் படுத்திய பாடுகளையெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கிய து இதுகாறும் எனக்குத் துணைசெய்தவர் ஒருவரும் இல்லைகாரைக்குடி திரு. சா. கணேசனைத் தவிர, அந்த யானை முகக் கடவுளே இவர் வடிவாக வந்து என்னை ஆட்கொண்டான் என்று நம்புகின்றேன்: இந்த அதிராத நம்பிக்கை என்னைவிட்டு என்றும் அகலாது. 'திக்கற்ற வருக்குத் தெய்வமே துணை' என்று என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காண்கின்றேன்; உணர் கின்றேன். ஒவ்வொரு நிலையிலும் முயற்சியைக் கைவிடாமல் இருக்க வேண்டும் என்று என்னுள்ளே தோன்றாத் துணை யாக வீற்றிருக்கும் அந்த வேங்கடவாணன் தான் நெறிப் படுத்துகின்றான். அவனே யான் உயர்நிலைப் பள்ளியில் படித்த, நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடுவானும்-நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான்.' 1. நாலடியார்-248 (அறிவுடைமை)