பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோண வழி 星等9 என்ற நாலடியார் பாடலை அடிக்கடி நினைவு கூரச் செய்கின்றான். அன்றியும், எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித் தமக்குத் துணையாவார் தாம்தெரிதல் வேண்டா பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை தமக்கு மருத்துவர் தாம்." என்ற பழமொழியும் வழிகாட்டுகின்றது. நமக்கு வேண்டிய நன்மையை நாமே தேடிக் கொளல் வேண்டும் என்றல்லவோ இப்பழமொழி ஆற்றுப்படுத்துகின்றது? திருவள்ளுவரும் ஊக்கம் உடைமையே’ நிலையான உடைமை; காரணம், அதுவே மனத்தில் உள்ள செல்வ மாகும்.' நிலைத்த செல்வமான ஊக்கத்தைத் தம்மிடம் கொண்டவர்கள் பெற்ற நன்மை போய்விட்டதே என்று எப்போதும் வருந்த மாட்டார்கள், ஊக்கம் கொண்டு உழைத்து மீண்டும் அதை அடையப் பாடுபடுவார்கள்.4 இவ்வாறு கூறும் வள்ளுவமும் எனக்கு ஒளிகாட்டி வழி காட்டுகின்றது. கும்பகோணத்திலுள்ள ஓமியோபதி முறை ஆய்வுக் spasib” (Institute of Homeopaths) arss flanswog, வந்தது. அதில் பதிவு செய்து கொண்டு அஞ்சல் வழியாக மருத்துவக் கல்வி பெற்றேன்.இத்தேர்வு எழுதுவதில் முறை கடினமாக இல்லை. ஓர் உயர்நிலைப்பள்ளித் தலைமை யாசிரியர்க்கு (மாணக்கரே தலைமையாசிரியரைக் குறிப்பிடலாம்) வினாத்தாள்கள் அ னு ப் ப ப் பெறும். அவர் மேற்பார்வையில்தான் தேர்வு எழுத வேண்டும். என்னுடன் உடன் பயின்று சைதையில் ஆசிரியர் பயிற்சி பெற்ற திரு. W. சொக்கலிங்கம்பிள்ளை காரைக்குடி நகராண்மைக் கழக உயர் நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்தார். காரைக்குடி வாழ் நாளில்-பத்தாண்டுகட்குப் பிறகு- ஒரு பதினைந்து 2. பழமொழி-149 (முயற்சி) 3. குறள்-592. 4. டிெ-593.