பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 to - நினைவுக் குமிழிகள்-4 ஆண்டுகள் அவரிடம் நெருங்கிப் பழகும் பேறு பெற்றிருந் தேன். என் குடும்பமும் காரைக்குடியில் இருந்தது. ஆதலால் ஒரு டிசம்பர் திங்களில் (1963) தேர்வு எழுதுவ தாகக் கருதி அவர் பெயரைக் குறிப்பிட்டுக் கும்பகோணத் திற்கு எழுதினேன் எண்ணியபடி திசம்பரில் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். பிப்பிரவரியில் (1964) எனக்கு டாக்டர்’ பட்டமும் வழங்கப் பெற்றது. ஒரு நாள் மார்ச்சுத் திங்களில் இப்பட்டத்தை எடுத்துக் கொண்டு வழக்கம்போல் காலை எட்டுமணிக்கு துணைவேந்தர் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித் தேன். சான்றிதழை அவர் முன் வைத்து, 'இதுதான் கும்பகோணம் வழி. டாக்டர் பட்டம் வாங்கி விட்டேன். உங்கள் பட்டம் இனி எனக்குத் தேவை இல்லை’ என்றேன். வியப்பும் வேடிக்கையும் கண்ட அவர், மிஸ்டர் ரெட்டியார், உங்கள் உண்மையான கவலை யையும் ஆர்வத்தையும் உணர்ந்தேன். இப்பொழுதே விண்ணப்பியுங்கள்' என்றார். 1964-இல் வடமொழித் துறையில் பதிவு செய்து கொண்டேன். துணைப் பேராசிரியராக இருந்த டாக்டர். வி. வ, தாச்சரியார் வழி காட்டியாக அமைந்தார். ஐந்தாண்டுகள் ஆய்ந்து 1969-இல் பட்டமும் பெற்றேன். பணியாற்றிய தலத் திற்கும், வழிகாட்டியாக அமைந்தவருக்கும் என் மன நிறைவுக்கும் பொருத்தமான 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வாரின் தத்துவம்” (Religon and Philosophy of Nalayira Divya Prabandham with Special Reference to Nammalvar) ergärp 5606wijsou ziù பொருளாகத் தேர்த்தெடுத்துக் கொண்டேன். இப்படிப் பல்கலைக் கழக விதிகளை வைத்துக்கொண்டே 5. இப்போது அவர் இல்லை. சுமார் பத்தாண்டு. கட்கு முன்னரே அவர் பரமன் அடி சேர்ந்து விட்டார். அவர் இறப்பதற்கு மூன்று திங்கட்கு முன்னர் அவரோடு அளவளாவி மகிழ்ந்தேன்.