பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோண வழி 及够置 "சடுகுடு’ விளையாடி 52-வது வயதில் டாக்டர் பட்டம் வந்தது- கர்மபுத்திரன்’ போல, எந்த நிலையில் எது கிடைத்தாலும்-துன்பத்தைச் சேர்த்துதான் சொல் கின்றேன்-அதுவும் 'அவன் அருள் தானே. ஆழ்வார் பாசுரங்களில் உருகினேன்; கண்ணிர் ஆறாகப் பெருகிற்று. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருத்தலங்களைச் சேவிக்கவேண்டும், தலத்திலேயே அவர் களின் அருளிச் செயல்களை’ அநுபவிக்கவேண்டும் என்ற பேரவா என்னைச் சூழ்ந்தது. 108 தலங்களில் 102 ஐக் குடும்பத்துடன் சேவிக்கும் பேறு பெற்றேன் சேவிக்கும் பேறு இருந்ததால். திருத்தலப் பயணம் பற்றிய அநுபவங்கள் பின்னர் எழுதும் குமிழிகளில் வெளிவரும். ஏழுமலையானின் திருவருள் எப்படி எப்படி எல்லாம் வெள்ளங் கோத்து என் மீது பாய்கின்றது என்பதை அவ்வப்போது விளக்குவேன். 'கும்பகோண வழி' என்கின்ற போதே சாரங்கப் பாணிப் பெருமாள் ("சார்ங்கப்பாணிப் பெருமாள்' என்பதே சரி) நினைவுக்கு வருகின்றார். இவர்தாம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஆராவமுதன்". இப்பெருமாள்மீது மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருவாய்மொழிதான்' நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் பக்திக் கருவூலத்தைக்ஆராவமுதமாக இனிக்கும் இலக்கியப் பெட்டகத்தைக் காண்பதற்கு ஒரு மந்திரத் திறவுகோலாக அமைந்தது. அலாவுத்தீன் என்ற சிறுவனுக்குக் கிடைத்த மந்திர விளக்கு போல் அமைந்தது என்றும் சொல்லிவைக்கலாம். நாதமுனிகட்கு அமைந்த 'கும்பகோண வழி' என்று வழங்கினாலும் தவறில்லை. 6. திருவாய், 5. 8. ஆராவமுதே' என்று தொடங்கு வது டி நி-11