பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோண வழி I 63 திருக்குருகூரை அடைந்தவர் அங்குத் திருக்கோயில் கொண்டிருக்கும் பொலிந்து நின்ற பிரானையும் திருப்புளி யாழ்வாரையும் சேவித்து அப்பகுதியிலுள்ள சிலரை இப்பிரபந்தம் பற்றி உசாவுகின்றார், அவர்கள் நம்மாழ்வாரின் திருவடி சம்பந்தம் பெற்ற மதுர கவிகளின் மரபில் வந்த பராங்குச தாசரை வினவினால் இதுபற்றித் தெரியக்கூடும் எனக் கூறி அவர்தம் இருப்பிடத்தையும் தெரிவிக்கின்றனர் அப்பராங்குச தாசரிடம் வருகின்றார் நாதமுனிகள்: முனிகள் அவரை வினவ அவர் பதினொரு பாசுரங்களைக் கொண்ட கண்ணிநுண் சிறுத்தாம்பு’’ என்ற பிரபந்தத்தைப் பன்னிராயிரம் முறை ஒன்றிய மனத்துடன் நம்மாழ்வார் திருமுன் உருப்போடுகிற வர்கட்கு ஆழ்வார் தோன்றி யருள்வார் என உரைத்தருளு ஒன்றார். அங்ங்னமே முனிகளும் செய்ய, ஆழ்வார் அவர் முன் தோன்றித் தாம் அருளிய திருவிருத்தம், திருவாசி ரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்களையும் ஏனைய ஆழ்வார் பாடியருளிய வற்றையும் திருமந்திரத்தையும் அட்டாங்கயோகத்தின் நுட்பங்களையும் கூறியருளுகின்றார். பின்னர் தம் பதி திரும்பி, வேதவியாசர் திருமறைகளை நான்காக வகுத்தாற்போல, இவரும் இப்பாசுரங்களை முதலாயிரம் பெரிய திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என்ற நான்கு பகுதிகளாக வகுக்கின்றார். தம்முடைய மருமக்களாகிய மேலையகத்தார், கீழையகத்தார்என்பவர்களைக்கொண்டு பண் முறைகளையும் அமைக்கின்றார். இந்த நான்கு தொகுதிகளும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்ற பெயரில் நம்மிடையே வழங்கிவருகின்றது. 'கும்பகோண வழியால் நாதமுனிகட்கு ஆழ்வார் பாசுரங்கள் கிடைத் 8. வைணவர்கள் நம்மாழ்வார் தங்கியிருந்த புளிய மரத்தையும் "ஆழ்வார்’ என வழங்குதல் மரபு. 9. மதுரகவிகள் நம்மாழ்வார்மீது பாடிய ஒரு சிறுபிரபந்தம். முதலாயிரத்தில் உள்ளது.