பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தில்லி மாநகர்ப் பயணம் 1 & 5 கள் அல்லவா? ஆனால் துணைவேந்தர் திறமையுள்ளவர் கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்களுடன் மதிப் புடனும் அன்புடனும் குழைந்து பழகுவார். நானே இதற்கு ஓர் எடுத்துக் காட்டவேன். இல்லத்தில் சந்தித்தால் செவ்வியறிந்து நீண்ட நேரம் பழகுவேன்; அரட்டையும் அடிப்பேன்! அலுவலகத்தில் சந்திக்க தேர்ந்தால் விரைவில் சந்திக்க நேர்ந்த பணியை முடித்துக் கொண்டு நானே கத்தரித்துக் கொண்டு வெளியேறிவிடுவேன். 1963-ஆகஸ்டுத் திங்களில் சென்னையில் மொழி பெயர்ப்பு பற்றி ஒரு கருத்தரங்கு நடக்க இருந்தது. இதற்கு என் பெயரைப் பரிந்துரைக்க வேண்டுமென்று துணைவேந்தர் நாயுடு அவர்கள் முதல்வர் டாக்டர் டி. ஏ. புருஷோத்தம் அவர்கட்கு ஒரு குறிப்பு அனுப்பி அயிருக்க வேண்டும்; அல்லது நேரில் அல்லது தொலைபேசி மூலம் சொல்லியிருக்க வேண்டும். ஆகவே, அவர் என் பேரைப் பரித்துரைத்து அக்கடித நகலை எனக்கும் அனுப்பி வைத்தார். அங்ஙனமே பல்கலைக் கழகமும் என்னை அக்கருத்தரங்கிற்கு நோக்கராக (Observer) அனுப்பி வைத்தது. இது சென்னையில் தென்னிந்திய மொழிகள் புத்தக நிறுவனம், தமிழக அரசு புத்தக வெளியீட்டுக் கழகம் ஆகிய இரண்டின் கூட்டுப் பொறுப்பில் மூன்று நாட்கள் நடைபெற்றது.மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் (Woodlands) உணவு விடுதியில் கூட்டங்களை அமைத்திருந் தனர். நான் மயிலை முனிவர் பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜூலு ரெட்டியார் இல்லத்தில் தங்கி நாடோறும் கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டிருந் தேன் பெரும் புலவராதலால் சாதாரண உலகச் செய்தி களைப் பற்றி உரையாடும்போதுகூட இலக்கியஇலக்கணக் குறிப்புகள் நடமாடும். அவற்றால் பெரும் பயன் அடைவேன். நான்கு மொழிக்கும் பேராளர்கள் பங்கு கொண்டனர். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் நோக்கர்களையும் பேராளர்களையும் அனுப்பியிருந்தன.