பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 6 நினைவுக் குமிழிகள். திருவேங்கடவன் பல்கலைக் கழகத்திலிருந்து தான் மட்டிலும்தான் வந்திருந்தேன். தனியார் கல்லூரியில் பணியாற்றினவனாதலால் இத்தகைய தேசிய கருத்தரங்கு களில் கலந்து கொள்ள வாய்ப்பிராது என்றும் எனக்கு இத்தகைய வாய்ப்புகளை நல்கி அநுபவம் பெறச் செய்ய வேண்டும் என்றும் துணைவேந்தர் கருதியிருக்க வேண்டும். இந்தக் கருத்தரங்கில் அறிவியல் ஆய்வு பண்பாட்டுத் துறை அமைச்சர் பேராசிரியர் உமாயூன் கபீரும் பல்கலைக் கழக மானிய ஆணையத் தலைவர் டாக்டர் கோதாரி அவர்களும் கலந்து கொண்டனர். சென்னை மாநில நிதி-கல்வி அமைச்சர் திரு எம். பக்தவத்சலம் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்தார். நான் சாதாரண விரிவுரையாளராக இருந்த காலத்தில் துணைவேந்தர் காயுடு அவர்களிடமும் (1960-64) துணைவேந்தர் டாக்டர் W.C. வாமனராவ் அவர்களிடமும் (1964-1969) பின்னர் நான் துணைப் பேராசிரியராகப் (Reader) பணியாற்றியபோது பேராசிரியர் கே. சச்சிதா நந்த மூர்த்தி அவர்களிடமும் (1975-78)-நான் 24-10-77இல் ஓய்வு பெறும் வரை-பெற்ற மரியாதையும் மதிப்பும் டாக்டர் டி. சகங்காத ரெட்டி துணைவேந்தராக இருந்த காலத்தில் (1969-1975) பெறவில்லை. முற்குறிப்பிட்ட இருவரும் என்னுடைய உழைப்பையும் புலமையையும் நன்கு மதிப்பீடு செய்து அறிந்தவர்கள். இதனால்தான் நான் வேண்டாமலேயே துணைவேந்தர் நாயுடு அவர்கள் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு என்னை நோக்கராக அனுப்பி வைத்தார். இன்னொரு நிகழ்ச்சியும் ஈண்டு நினைவிற்கு வரு கின்றது. 1965-ஜனவரியில் 26-வது உலகக் கீழ்த் திசை மாநாட்டுக் கருத்தரங்கு தில்லி மாநகரில் நடை பெற இருந்தது. 1963 செப்டம்பர் முதற்கொண்டே இம்மாநாடு குறித்து விளம்பரங்களும், சுற்றறிக்கைகளும் இந்தியத் துணைக் கண்டம் எங்கும் பரவத் தொடங்கின. இதற்கு