பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தில்லி மாநகர்ப் பயணம் 16 7 முன் சென்னையில் நடைபெற்ற மொழி பெயர்ப்புக் கருத்தரங்கில் நோக்கராக (Observer) கலந்து கொண்டு ஒரளவுப் பயன் பெற்றவனாதலால், தில்லியில் நடை பெறும் உலகக் கருத்தரங்கில் ஒரு பேராளனாகக் கலந்து கொள்ளவேண்டும் என்றும், ஒர் ஆராய்ச்சிக் கட்டுரை மாநாட்டில் திராவிட மொழிப் பகுதியில் படிக்க வேண்டும் என்றும் ஒரு பேரவா என்பால் எழுந்தது. சாதாரண விரிவுரையாளனாக இருந்த என்னைப் பல்கலைக் கழகம் இந்த மாநாட்டுக்கு அனுப்பாமல் புறக்கணிக்கக் கூடும் என்ற ஐயமும் என்பால் எழுந்தது. தெலுங்குத் துறையில் நாலைந்து விரிவுரையாளர்கள் பணியாற்றி வந்தனர். தொடக்கக் காலத்தில் டாக்டர் பட்டம் இல்லாத இலக்குமி நாராயண சாஸ்திரி என்பார் சென்னை மாநிலக் கல்லூரி யில் பேராசிரியராக இருந்த செல்வாக்கைக் கொண்டு எப்படியோ துணைவேந்தர் நாயுடு அவர்களிடம் நாடகம் ஆடி துணைப் பேராசிரியராக (Reader) நியமனம் பெற் றிருந்தார். அதே செல்வாக்கையும் நடிப்பையும் கொண்டு பேராசிரியராவதற்கு அரும்பாடுபட்டார்; பருப்பு வேகாத தால் பதவியைத் துறந்து வெளியேறினார். பின்னர் தில்லி மாநகரில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தாரால் தொடங்கப்பெற்ற கல்லூரியின் முதல்வர் பொறுப்ப்ை ஏற்றுச் சில ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்றதை அறிந்தேன். ஒரு சில ஆண்டுகள் திரு. இலக்குமி நாராயண சாஸ்திரியுடன் பழகின திலிருந்து அவர் தமிழர்களிடம் கொண்டிருந்த வெறுப்பை உணர முடிந்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றியபோது இப்படித்தான் இருந்தாரோ என்ற ஊகமும் என்பால் அடிக்கடித் தோன்றிற்று. ஆனால் இந்த ஆராய்ச்சியில் நான் இறங்க வில்லை; ஈடுபடவும் விரும்பவில்லை. சென்னையில் மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய திரு ஜி. என். ரெட்டியும், டாக்டர் பட்டம் பெற்ற திரு கே. மகாதேவ சாஸ்திரியும், தெலுங்குத் துறை