பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 68 நினைவுக் குமிழிகள்-4 யில் விரிவுரையாளராகச் சேர்ந்திருந்தனர். நான் சேர்ந்த பிறகு சென்னையிலிருந்து திரு T. கோதண்ட ராமய்யா என்பவரும் (வீட்டில் தமிழ் பேசும் தெலுங்கு பிராமணர்) தெலுங்குத் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவர் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரின் பரிந்துரையால் வந்தவராதலால் ஊதியத்தில் இரண்டு உயர்படிகள் பெற்று வர முடிந்தது. தெலுங்குத் துறையில் எம்.ஏ.பி. ஏ.யில் சிறப்புத் தெலுங்கு வகுப்புகளும் நடைபெற்றதால் ஐந்தாறு ஆசிரியர்கட்குப்பணிஇருந்தது. திரு ஜி. என். ரெட்டி மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பதவியிலிருந்து அநுபவம் பெற்றிருந்தும் இவரை ஏன் துணைப் பேராசிரியராக்கவில்லை? திரு. இலக்குமி நாராயண சாஸ்திரிக்கு வழங்கப் பெற்ற சலுகை (பிஎச்.டி பட்டம் இல்லாதிருந்தும் துணைப் பேராசிரியராக நியமிக்கப் பெற்றமை) ஏன் திரு ஜி. என். ரெட்டிக்கு வழங்கப் பெறவில்லை? டாக்டர் பட்டம் பெற்று தெலுங்கு, மொழியியல் துறைகளில் எம்.ஏ.பட்டங்களும் பெற்றிருந்த திரு.கே.மகாதேவ சாஸ்திரிக்கு ஏன் துணைப் பேராசிரியர் பதவி கிடைக்கவில்லை? டாக்டர் பட்டமே பெற்றிராத மேஜர் பார்த்தசாரதிக்கு உளவியல் துறையில் எப்படித் துணைப் பேராசிரியர் பதவி வந்தது? இப்படி யெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது. இவை யெல்லாம் கவைக்குதவாத செய்திகள்; ஆற்றல் இல்லாத வன் காணும் உண்மைகள், வல்லான் வகுத்ததே வாய்க்கா லாக இருக்கும்போது, அதுவும் ஆறு வரம்பின்றி ஒடும் போது, யார்தான் என்ன செய்ய முடியும்? துணிவைத் துணையாகக் கொண்டு துணைவேந்தர் நாயுடு அவர்களைச் சந்தித்து தில்லியில் நடைபெற இருக்கும் உலகக் கீழ்த் திசை மாநாட்டிற்கு என்னைப் பேராளனாக அனுப்புமாறு வேண்டினேன். அவர் மறுமொழி சாதகமாக இருக்கும்போலத் தோன்றியதால் எழுத்து மூலம் ஒரு விண்ணப்பமும் அனுப்பினேன். தமிழ்த்