பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தில்லி மாதகர்ப் பயணம் I 69 துறையில் என்னையும், தெலுங்குத் துறையில் டாக்டர் கே மகாதேவசாஸ்திரியையும் \நாங்கள் இருவரும் விரிவுரையாளர்கள்), வடமொழித் துறையில், டாக்டர் சிரீகிருஷ்ணசர்மாவும், வரலாற்றுத் துறையில் டாக்டர் இராமாராவையும் பல்கலைக் கழ்கம் அனுப்பி வைத்தது. நான் பண்டைய தமிழ் இலக்கியத்தில் காணும் இந்திய @Gamlothur@ Lib Muu sG # g” (The Cancept of One India in Anient Tamil Literature) argår (D soft &a girajiš கட்டுரையை அழகாகத் தயாரித்துக் கொண்டு சென்றேன். எங்கட்கு இந்திரப் பிரஸ்தம் என்ற பகுதியிலுள்ள பொருளாதார ஆய்வு நிறுவனத்து மாணாக்கர்குரிய உணவு விடுதியில் இடம் அளிக்கப் பெற்றது. உண்டிக்கும் உறையுளுக்குமாக நாளொன்றுக்கு ஒருவர் ஒன்பது ரூபாய் கட்டணமாகத் தரவேண்டும். உறையுள் இலவச மாக இருக்கும் என்று தோன்றியது: அரசே இடம் ஒதுக்கித் தந்தது. ஒன்பது ரூபாயும் உணவுக்கு மட்டிலும் என்பது என் ஊகம். மிகச் சிறந்த முறையில் படுக்கைக் காஃபி, காவைச் சிற்றுண்டி, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டிகாஃபி, இரவு உணவு மிக உயர்ந்த முறையில் அளிக்கப் பெற்றன. டிசம்பர்-ஜனவரி தில்லியில் கடுங்குளிர். உணவு விடுதியில் மின்சார முறையில் வெந்நீர் வசதி இருந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை கொடுக்கப் பெற்றது. மாநாடு விஞ்ஞான பவனியில் நடைபெற்றது. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கும் மாநாடு நடைபெற்ற இடத் திற்கும் எட்டு கிலோ மீட்டர் தொலைவு. மாநாட்டு வளாகத்தில் தனியார் உணவு விடுதிகள் இருந்தன. நாங்கள் நால்வரும் போக வர ரூ|10. பேசிக்கொண்டு மதிய உணவுக்கு விடுதிக்கு வந்து விடுவோம். ஏனெனில் மாநாட்டுவளாகத்திலுள்ள விடுதிகளில் உணவு நன்றாக இல்லை; ஒரு வேளை உணவுக்குத் தலைக்கு ரூ 6|- வீதம் தர வேண்டியிருந்தது; மாலைச் சிற்றுண்டியை மாநாட்டி