பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼7翻 நினைவுக் குமிழிகள்-4 டத்திலேயே சிறிது கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொண்டோம். மாநாடு ஆறு நாட்கள் நடைபெற்றது. பிரதமர் சவகர்லால் நேரு அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்தார். அப்பொழுதே அவர் உடல் நிலை சரியாக. இல்லை. சில திங்களில் அவர் திருநாடு அலங்கரித்து விட்டார் (1964). with tritiq di Indology arsārp uð5 (1) Vedic Studies. (2) Classical Studies (3) Religioand Philosophy (4) History and Culture (5) Modern Indian Languages and Linguistics என்ற உட்பிரிவுகளாக பிரிக்கப்பெற்று sy suig sir History and Culture grgårp l?faldi, grsir கட்டுரை இடம் பெற்றது. இந்த உட்பிரிவிற்குப் பன்மொழிப் புலவர் திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார். தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்தார். இவரு டைய சீரிய தலைமையில்தான் என்னுடைய கட்டுரை படிக்கப் பெற்றது. குழுமியிருந்தோர் அனைவரும் என் கட்டுரையைப் பாராட்டிப் பேசினர். என் அரிய நண்பர் டாக்டர் சாலை இளந்திரையன் (தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிக் கொண்டிருந் தவர்) கட்டுரைப் பொருளைப் பாகுபாடு செய்து எடுத்துக் கூறின முறை, படித்த முறை இவை மிக அற்புதமாக இருந்தது என்று கைகுலுக்கிப் பாராட்டினார். தலைவர் அவர்களும் கட்டுரையை மெச்சிப் பேசினார். இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் புவனேஸ்வரத்தில் அனைத்திந்திய காங்கிரசு மாநாடுநடைபெற்றது.பேரறிஞர் அண்ணா தலை மையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் கோரிய தனித்திராவிடநாட்டுப்பிரிவினைக்கொள்கையைகாங்கிரசு 1. இந்தக்கட்டுரை 1964-ஏப்ரல் -மே யில் Hindu. இதழிலும் வெளி வந்து தமிழகத்திலும் அறிஞர் களின் பாராட்டைப்பெற்றது.