பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தில்லி மாநகர்ப் பயணம் I f 重 மாநாடு வன்மையாகக் கண்டித்துத் தீர்மானம் நிறை வேற்றிய செய்தி நாளிதழ்களில் முதல் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. தில்லி மாநாட்டில் என்னுடைய கட்டுரை அரசியல் சார்பின்றிப் பண்பாட்டின் அடிப்படையிலிருந் தாலும் தனித் திராவிட நாட்டுப் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகச் செய்தித் தாள்கள் பறைசாற்றின: முன் பக்கச் செய்தியாகப் பதிப்பித்தன. இக்காலத்தில். காரைக் குடியில் 1960க்கு முன்னர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் என் மாணாக்கராக இருந்த திரு இசக்கி என்பவர் இந்தியச் செய்தித் துறையில் ஒரு முக்கிய அலுவலராகப் பணி யாற்றிக் கொண்டிருந்தார். என் கட்டுரைப் புகழ் ஆரம் பெற்றது இவர் கைங்கர்யம்' என்று என்னால் ஊகிக்க முடிந்தது. நாங்கள் இருவரும் சந்தித்து அளவளாவிய போது திரு. இசக்கியும் இக்கட்டுரையைப் பற்றிப் பாராட்டியதாக நினைவு’ அப்போது திரு. இசக்கி என்னிடம் இன்னொரு முக்கிய செய்தியையும் தெரிவித் தார். அரசியல் வானத்தில் பேரறிஞரின் அண்ணாவின் புகழ் சீறுவாணம்போல் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பரவிக் கொண்டிருந்த சமயத்தில் தமிழகத்தைச் சார்ந்த சில பெரிய காங்கிரசுத் தலைவர்கள் சவகர்லால் நேருவிடம் அண்ணாவைப் பற்றிக் குறைத்துப் Gust அவரது தூய்மையான உள்ளத்தைக் கெடுத்துக் கொண்டி ருந்தார்கள். ஆனால் அண்ணாவின் நாடாளுமன்ற முதல் சொற்பொழிவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டி ருந்த நேரு அவர்கள் அண்ணாவின் நேர்மை, திறமை, மனத்துாய்மை இவற்றைக் கண்டு மூக்கின்மீது விரலை 2. Qā oft@aos-Gang Studies in Arts and Sciences என்ற தலைப்பில் 85 கட்டுரைகளைத் தாங்கி வந்த என்னுடைய மணிவிழா மலரில் (1978) இடம் பெற்றுள்ளது.