பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தில்லி மாநகர்ப் பயணம் 17s. Ancient Tamil Literature” sr69 so si LG soprøolu s Bitlilj மாறு கேட்டிருந்தது. நானும் அவர்கள் கேட்டபடி அனுப்பி வைத்தேன். அது அந்தப் பாராட்டுச் சிறப்பு மலரில் (இல்லை, அஃது ஒரு சிறந்த அறிஞர்களின் கட்டுரைத் தொகுதி) இடம் பெற்று மேலும் புகழ் பெற்றது. இன்று வரை(1990-ஏப்பிரல்)அந்தத் தொகுதியை நான் பார்த்த தில்லை. என் அரிய நண்பர் திரு.ப. அரங்கசாமி தலைமைத் தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, லாலுகுடி, திருச்சி மாவட்டம்) இதைப் படித்து விட்டு இந்தச் சிறப்புத் தொகுதியில் தமிழகத்து அறிஞராகிய தங்கள் கட்டுரை ஒன்று மட்டிலும் இடம் பெற்று இருப் பதைக் காண என் உள்ளம் குளிர்கின்றது; பெருமகிழ்ச்சி அடைகின்றேன்' என்று 1976 இல் எனக்கு ஒரு கடிதம் எழுதியதாக நினைவு. இக்கட்டுரை Studies in Arts and Sciencss என்ற தலைப்பில் வெளி வந்த (1978) என் மணி விழா மலரில் பல அறிஞர்களின் கட்டுரைகளின் நடுவில் (85 கட்டுரைகளில் ஒன்றாக) இடம் பெற்றுத் திகழ் கின்றது. குமிழி-179 23. இல்லற நெறி-நூல்வெளியீடு såsses, திருச்சிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது திருச்சி உயர்ந்து அகன்ற மரங்கள் நிறைந்த மேற்கு நிழற்சாலையிலுள்ள மாவட்ட நூல் நிலையத் திற்கு அடிக்கடிச் சென்று பல நூல்களைப் படிப்பது வழக்கம். திரு. வி. க. அவர்களின் நூல்கள் கருத்தாலும் நடைச் சிறப்பாலும் என்னைக் கவர்ந்தன. பெண்ணின்