பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒 74 நினைவுக் குமிழிகள்-4 பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னை மிகவும் கவர்ந்தது. இந்நூலை இரண்டு மூன்று முறைப் படித்த தாக நினைவு. இதில் உள்ள கருத்துகள் என்னை மிகவும் கவர்ந்தன. கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலிய அனைத்திற்கும் நிலைக்களனாக இருப்பது உடல் என்பதை ஒவ்வொரு வரும் நன்கு அறிவர். அறிவு விளக்கம் மன அமைதியைப் பொறுத்து நிற்பது. உடல் நலம் இனத்தை அறிவிக்கும் உறுப்பின் அகப்புற வளத்தைப் பொறுத்தது, அவ்வுறுப் பிற்குப் பழுது நேரின் வாழ்வே குலைந்து போகும். உடலில் எவ்வுறுப்பிற்கு ஊறு நேரினும் சிகிச்சை செய்து கொள்ள இயலும், எவ்வுறுப்பினை இழப்பினும் உயிர் வாழ்தல் கூடும். ஆயின் குறிக்கு ஊறு நேரின் அதற்கு எவ்வித சிகிச்சையும் இல்லை. சிகிச்சை செய்து கொள்ளினும் ஊறு நீங்காது; ஊறுடன் உயிர் வாழ்தலும் இயலாது. இந் துட்பத்தினை நன்கு உணர்ந்தே தமிழ் மக்கள் இவ்வுறுப் பிற்கு உயிர்கிலை' என்று பெயர் சூட்டிப் போற்றினர். எத்தனையோ புதுமணத் தம்பதிகள் உடற்கூறு தெரி யாது பல வழிகளிலும் கெடுகின்றனர். இருவரும் கெடுவ தற்கு ஆண் மகனே முக்கிய காரணமாகின்றான். தவறான வழிகளில் சென்று பல்வேறு வித இரகசிய நோங் களை அடைகின்றான்; தன் துணைவிக்கும் இதனைத் தொற்றச் செய்து இல்லற வாழ்க்கையின் இன்பத்தையே குலைத்து விடுகின்றான். ஆதலால் ஆடவன் ஆணுறுப்பு பற்றியும் அதனோடு தொடர்புள்ள சிறுசிறு உறுப்புகள் பற்றியும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அங்ங்ணமே பெண்ணும் கருக்குழியைப் பற்றியும் அதன் சினைகளாக வுள்ள சிறுசிறு உறுப்புகள் பற்றியும் போதிய அளவு அறிவு பெற்றிருத்தல் வேண்டும். இருவரும் தம் உறுப்புகளைப் பற்றிப் போதிய அளவு அறிவு பெறாத காரணத்தால் நன் முறையில் தாம்பத்திய உறவு கொள்ள முடிவதில்லை. இவர்கள் உறுப்புகளின் நிலையை உணராது, அவற்றைப்