பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 76 நினைவுக் குமிழிகள்-சி மீண்டும் ஒரு முறைப் படித்தேன். நமது நாட்டுப் பழமை என்னும் உயிர்' மேல் நாட்டுப் புதுமை என்னும் "உடல் தாங்கும் முறையில் தமிழ் மொழியில் நூல் பலயாத்தல் காலத்துக்கு இயைந்த தொண்டாகும். அத் தகைய நூல்களின் இன்றியமையாமையைச் சொல் லவும் வேண்டுமோ?' என்ற திரு.வி.க. அவர்களின் திருக் குறிப்பின் அடிப்படையில் இந்த இல்லற நெறி' என்ற நூல் உருவாகியது. இதற்கு முன் பல ஆண்டுகள் உடல் பற்றி அறிந்த அறிவும் இந்நூல் எழுதத் தொடங்கியபிறகு திரட்டிய நூலறிவும் கைகொடுத்து உதவின. மணப்பொருத்தம். அறிவியலடிப்படையில் திருமணம், இனப்பெருக்கம், குடும்பக் கட்டுப்பாடு. மக்கட்பேறு. திருமணக்கலை, பால் பொருத்தக் கேடுகள், திருமண வாழ்வில் உடல் நலம், மகிழ்வுடைய இல்வாழ்க்கை, மங்கலவாழ்த்து என்ற பத்துத் தலைப்புகளில் எழுதத் திட்டமிட்டு என் எழுத்துப் பணியைத் தொடங்கினேன். ஒவ்வொரு தலைப்பின் கீழும் தொகுத்த செய்திகளை வேங்கடத்தான் வேலனுக்கு எழுதும் கடிதங்களாக" அமைத்தேன். கடித உத்தி எழுதுபவர் வாசகர்கட்கு நேரில் சொல்வது போன்ற உணர்வுகளை எழுப்ப வல்லது என்பதை இந்த நூல் உருவான பின்னர்தான் உணர முடிந்தது. "மணப்பொருத்தம்' என்ற தலைப்பில் ஆறு கடிதங்கள் அமைந்தன. இவற்றில் திருமணத்தின் நோக்கங்கள், இனப் பெருக்கம், Rh-கூறு, நிறக்கோல்கள்(Chromosomes) பற்றிய கருத்துகள், மரபுவழிப் பண்புகள் இறங்கும் முறை. குழந்தை வளர்ச்சியில் மரபுவழியின் பங்கு, உறவினர்களிடையே திருமணம் போன்ற செய்திகள் அடங்கியுள்ளன. அறிவியல் அடிப்படையில் திருமணம்' என்றி. தலைப்பில் ஆண் உறுப்புகள், பெண் உறுப்புகள் பற்றிய