பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற நெறி-நூல் வெளியீடு Η 77 விரிவான நுட்பமான விளக்கங்கள் அமைந்தன. ஆணின் இனப் பெருக்க மண்டலத்தை விளக்கும் பாங்கில் விந்துப் பாய்மம், விரைகள், விரைப்பைகள், விந்தணுக்கள் வரும் வழி, கலவியில் ஆண் குறியின் நிலையும் பங்கும். விந்தணுக்களின் தன்மை, அவற்றின் ஆயுட்காலம் பிரம்மச் சரியம், ஹார்மோன்கள். பாலறி குறிகள், 'விரையடித்தல், சுரப்பிகளை இடம் பெயர்த்து நடுதல் இன்னோரன்ன செய்திகள் இப்பகுதியில் ஒன்பது கடிதங்களால் விளக்கம் அடைகின்றன. இனப்பெருக்கம் என்ற பகுதியில் வித்து பாய்ச்சுதல், விந்தணுக்கள் கருப்பையில் நுழைதல், கருவுறுதல்; குழநதை வளர்ச்சியில் முதல் சூல் நிலை, இளஞ்சூல் நிலை, நஞ்சுக் கொடி, கருப்பையில் மாற்றம், கருப்ப காலச் சின்னங்கள்; கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், போலி கருப்பம், கருப்பகாலம்; கருவுயிர்த்தல் பற்றிய சில கொள்கைகள், பிரசவத்தில் மூன்று நிலைகள், பலவகைப் பிரசவங்கள் மருந்துகளின் தீங்குகள்; கருப்பைக் கோளாறு பிரசவ பாகத்தின் கோளாறு, குழந்தையிடம் கோளாறு, சிசேரியன் செக்ஷன், ஆயுதப் பிரசவம் -பால் சுரத்தல், மாதவிடாய்த் தோற்றம்: ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்து பிறத்தல், இரட்டைக் குழவிகளின் நிலைகள், குழந்தையின் பாலை அறுதியிடுதல்-போன்ற செய்திகள் இப்பகுதியில் ஆறு கடிதங்களால் விளக்கம் பெறுகின்றன. சூடும்பக் கட்டுப்பாடு என்ற பகுதியில் குடும்பக் கட்டுப்பாடு-விளக்கம், இதன் இன்றியமையாமை, நாகரிகத்தின் அருஞ் செயல், இயற்கைக் கட்டுப்பாடு; பல முறைகள், கூடு பருவம், மாதவிடாய் வட்டத்தில் மூன்று பகுதிகள்: ஆண் முறைகள், பெண் முறைகள் உயிரியல் முறைகள்; இச்செய்திகள் ஐந்து கடிதங்களால் விளக்கப் பெறுகின்றன. நி-12