பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7 & நினைவுக் குமிழிகள் .4 மக்கட்பேறு என்ற பகுதியில் கருத்தரிப்பிற்குரிய காரணங்கள், சூதக ஒய்வு நடை பெறும் முறைகள், குழந்தைப் பேறு ஏற்படாததற்குக் காரணங்கள். தல யாத்திரை; ஆண் மலடு, பெண் மலடு விளக்கம்; இனப் பெருக்கக் கோளாறுகள்: காலத்திற்கு முன் கருவுயிர்ப்பு. குழந்தை இறந்து பிறத்தல், கருச்சிதைவுஇன்னோரன்ன செய்திகள் நான்கு கடிதங்களில் விளக்கம் பெறுகின்றன. திருமணக்கலை என்ற பகுதியில் பாலுறவின் பங்கு, திருமணம் தெய்விக உறவு. பாலுறவு பற்றிய யுக்தி முறை; இணைவிழைச்சு, இது நடை பெறும்பொழுது உடலின் நிலை, கன்னிச் சவ்வு கிழிதல், முதல் நாள் புணர்ச்சி, பசியும் பாலுறவும்-மகளின் பாலூக்கம், பெண்ணின் காம உணர்ச்சி, உணர்வு எல்ல்ைகள், ஆணின் பீடிகை, இணைவிழைச்சில் பெண் அசட்டை, சிருங் காரம், உச்ச நிலை உணர்ச்சி, தம்பதிகளிடம் பாலின்ப அளவுகள், இணைவிழைச்சுக் காலம்; புணர்ச்சி நிலைகள், வாத்ஸ்யாயனர் கூறும் நிலைகள், ஆடவர் பெண்டிர் வகைகள். புணர்ச்சி நிலைகளால் தாம்பத்திய உறவு இறத்தல், புணர்ச்சி நிலையின் பிரிவுகள்-போன்ற செய்திகள் ஐந்து கடிதங்களில் விளக்கம் அடைகின்றன. பால் பொருத்தக் கேடுகள் என்ற பகுதியில் பாலுற வின் முக்கியத்துவம், சங்கடங்கள் பிறப்புறுப்பு வலிப்பு, காரணங்கள்; இணை விழைச்சில், வலி, பெண்ணிடம் பால் விருப்ப மின்மை, காரணங்கள்; உச்ச நிலை உணர்ச்சி, அடைய முடியாமைக்குக் காரணங்கள். சமாளிக்கும் முறைகள்; ஆண்களிடம் பால் விருப்ப மின்மை, ஆண்மைக் குறைவு. விரைவாக விந்து வெளிப் படுதல், பால்விருப்பமின்மைக்குக் காரணங்கள், பிழை பாடான உறவுமுறைகள்: பாலுறுப்புகள், ஒவ்வாமை போன்ற செய்திகள் ஐந்து கடிதங்களில் விளக்கமாகின்றன.