பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-இல்லற நெறி-நூல்வெளியீடு I 79 திருமண வாழ்வில் உடல் கலம் என்ற இப்பகுதியில் நோயற்ற வாழ்வு, திருமண வயது, தம்பதிகளின் வயது வேற்றுமை, முதல் கருப்பம், கருத்தடை, கலவிபுரிதலில் கணக்கு, இருபாலாரின் பால் வேட்கையில் வேற்றுமை, உறவில் தாள இயக்கம், முட்டை பக்குவம்; மாதவிடா யின் பொழுது உறவு, கருப்ப காலத்தில் உறவு, மருத்துவரின் பரிந்துரை, கருவுயிர்த்தலுக்குப்பின் கலவி, சூதக ஒய்வின்பொழுது கலவி சூதக ஒய்விற்குப் பிறகு கலவி, பால் அடக்கத்தின் விளைவுகள், திருமணத்திற்கு முன்னர் உறவுகள், எச்சரிக்கை-குறிக்கோள் திருமணம் இன்னோரன்ன செய்திகள் நான்கு கடிதங்களில் விளக்கப் பெறுகின்றன. மகிழ்வுடைய இல்வாழ்க்கை என்ற பகுதியில் ஊழ் வ லியால் தொடர்பு, தமிழரின் மணவகைகள்-ஆரியரின் எண் வகை மணங்கள், காந்தருவம்-களவு: ஒற்றுமை வேற்றுமை; களவு-கற்பு-விளக்கம்; திருமண முரண் பாடுகள்: ஆளுமைக் கூறுகள், பண்பாட்டுப் பொருத்தப் பாடு:மாமனார் மாமியார் தொல்லைகள்; திருமணத் திற்கு முன்னர் இளைஞர்கள் மேற் கொள்ளவேண்டியவை இரண்டு படிகள்-போன்ற செய்திகள் ஆறு கடிதங்களில் விளக்கம் எய்துகின்றன. மங்கல வாழ்த்து என்ற இறுதிப் பகுதி மணமக்கள் அன்பு வடிவம் பெறல்; உடல் மனம் அறிவு என்ற முத்திற ஒற்றுமை; ஒழுங்குப்பட்ட இல்லறம் பெண்ணின் பெருமை; வாழ்த்துடன், மன்றலின் வந்து மணத்தவி சேறி வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து இன்துணை அன்னமும் எய்தி இருந்தார். ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்

-பாலகாண்-கடிமணம்-86

என்ற கம்பன் பாடலால் நிறைவு பெறுகின்றது.