பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நினைவுக் குமிழிகள்-4 இந்த நூலைக் காரைக்குடியில் ஒரு பதிப்பாளர் ரூ. 1000) முழு உரிமையுடன் தருமாறு கேட்டார்; ஐந்தாண்டுகட்குமேல் சிரமம் பெற்று எழுதிய நூலை அங்கனம் தர என் மனம் ஒப்பவில்லை. கழகம் இரண்டு ஆண்டுகள் வைத்திருந்து கைப்படியைத் திருப்பித் தந்து விட்டது. தமிழ்ப் புத்தகாலய அதிபர் திரு கண . முத்தையா ராயல்டி ஒப்பந்தத்தில் வெளியிட்டார். நூல் பெரும் புகழ் பெற்றதற்கு ஐயமில்லை. இந்த நூலுக்கு ஒரு மருத்துவ வல்லுநரிடம் அணிந்துரை பெறவேண்டும் என்பது என் விருப்பம். அப்போது நடுவண் அரசில் நலவாழ்வுத்துறையில் துணை அமைச்சராக இருந்த, டாக்டர் T. செளந்திரம் இராமச்சந்திரன் அவர்களை அணிந்துரை அருளுமாறு வேண்டினேன்; ஒப்பு க் கொண்டார். ஆனால் நூலின்படியை அனுப்பின போது அவர் இலேசான இதய நோயால் தாக்குண்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடைய தனி அலுவலர் அமைச்சர் மருத்துவமனையில் இருப்பதாகவும் வெளியில் வந்தவுடன் தருவதாகவும் கூறி அதுவரையில் காத்திருக்க முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார். அணிந்துரை அவசியம்; காத்திருக்கின்றேன்' என்று கடிதம் எழுதி னேன். 20 நாட்களில் அணிந்துரை வந்து சேர்ந்தது. இந்த நூல் எழுதுவதற்குக் காரணமாக இருந்த வரும் பெண்ணின் பெருமை” நூலின் ஆசிரியரும் இளமை மூதல் என் மனத்தைக் கவர்ந்தவருமான முத்தர் திரு வி. க. அவர்கட்கு இந்த நூலை, சாந்தியின் வடிவம்; செந்தமிழ்த் தென்றல் சால்பினுக் கமைந்ததோர் உரைகல்; காந்தியின் நெறியால் நல்வழி காட்டி, கருணையாம் திரைதவழ் வேலை;