பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற இ2றி-தால் வெளியீடு I 81 பாந்தளை முல்லை அலங்கலாய்ச் செய்யும் பண்புரு: பெண்மையைப் போற்றும் ஏந்தலார்-அமரர் திரு. வி.க பதத்தில் எழில் மணம் பெறுக இந்நூலே. என்ற பாடலால் அன்புப்படையலாக்கி மகிழ்ந்தேன். இஃது என்னுடைய பதினாறாவது வெளியீடாகும் (திசம்பர்-1964). குமிழி-180 24. தெலுங்கு மாநிலத்தில் தமிழ்ச் சங்கங்கள் மொழிவழிப்படி மாநிலங்கள் பிரிய வேண்டும் என்ற அரசின் கொள்கைப்படி ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் சென்னை மாகாணத்திலிருந்து தனித்தனி யாகப் பிரிந்தன. ஐதரபாத், திருவனந்தபுரம், பெங்களூர் என்ற மாநிலத் தலைநகர்களிலும், தில்லியிலும் தமிழர் கள் வாழ்வதால் பல்கலைக் கழக மட்டத்திலும் சில கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் வாழ் கின்றது. தமிழ்மக்களும் பிழைப்பின் நிமித்தம் தம் பிள்ளைகட்குக் கீழ் மட்டத்திலிருந்து மாநில மொழி களையே பயிற்றுவிப்பதால் கீழ்மட்டத்தில் தமிழ் பயில்வது குறைந்து கொண்டே வருகின்றது. இவ்விடங்களில் நாளடைவில் பல்கலைக்கழக மட்டத்தில் ஆராய்ச்சி மட்டத்தில்தான் தமிழ் பிழைத்து வாழும் என்பது என் கணிப்பு.