பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 நினைவுக் குமிழிகள்: திருப்பதி தமிழகத்தில் சேர்ந்தது என்பது தமிழர் களின் வாதம். சென்னை ஆந்திரர்கட்கு வேண்டும் என்பது ஆந்திரர்களின் கோரிக்கை. இதைப்பற்றிய பிரச்சினையே இப்போது இல்லை. நம்முடைய அருமை இராஜாஜி தம்முடைய அரசியல் ஞானத்தால் ஒருவிதமாகத் தீர்த்து வைத்துவிட்டார். திருப்பதி வாதத்திற்கிடமாக இருந்தபடியால், திருப்பதி ஆந்திரத்தில் இணைந்த பிறகு, திருப்பதியில் வேர்மட்டத்திலேயே தமிழை இல்லாது செய்து விட்டனர். தமிழ்ப் படித்தவர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தால் இந்தப் பிரச்சினைக்கு உயிர் இருந்து கொண்டே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டே "வேரில் வெந்நீர் ஊற்றியதுப் போல்'இந்தப் பிரச்சினையை எப்போதும் எழும்பாது செயது விட்டனர். தேவஸ்தானக் கலைக் கல்லூரியில் தமிழ் கற்கும் வாய்ப்பு இருந்தது. அதனை அறவே அகற்றிவிட்டனர். கீழ்த்திசைக் கல்லூரி யில் தமிழ் வித்துவான் வகுப்புகள் இருந்து வந்தன, அவற்றையும் இல்லாது ஒழித்தனர். இதை ஒரு குறை யென்றோ குற்றம் என்றோ இப்போது பேசுவதில் பயன் இல்லை; பேசவும் வேண்டியதில்லை. ஆந்திரர்கள் நிலை யில் தமிழர்கள் இருந்திருந்தால் இப்படித்தான் செய்திருப் பார்கள்; இதைவிட வேகமாகவும் இரண்டு பங்கு அதிக மாகவும் செய்திருப்பார்கள். தமிழை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்குத் தேவஸ்தான ஆட்சிப் பொறுப்பிலிருந்த சி. அண்ணாராவுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதைத் திருப்பதியிலிருந்த காலத்தில் யான் அறிந்தேன். பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் (முதல் துணைவேந்தர்), பரந்த நோக்கமுடையவர். தாம் முதல்துணைவேந்தராக நியமிக்கப் பெற்றுப் பணியாற்றி வந்தபோது, இந்த நிலையை நன்கு அறிந்திருந்தார். விரோத மனப்பான்மையோடு செயலாற்றுவதை விட தோழமை கொண்டு செயலாற்றினால் நிறைந்த பயன்