பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்கு மாநிலத்தில்தமிழ்ச் சங்கங்கள் I 83 உண்டு என்பதை நன்கு அறிந் வர். திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை இருக்க வேண்டும் என்பது இவர்தம் 'tள் நோக்கு’. புதிய பல்கலைக் கழகத் தின் ஆட்சிப் பொறுப்பில் தேவஸ்தானத்திற்குப் பெரும் பங்கு இருந்து வந்தது. பல்கலைக்கழக வளாகத்திற்கு நிலம் தந்தவன் ஏழுமலையான்; தேவஸ்தானக் கல்லுரரிக்குச் சொந்தமாக இருந்த கட்டடங்களையெல் லாம் தொடக்கத்தில் உதவியாக இருக்கும் பொருட்டுப் பல்கலைக்கழகத்திற்குஒப்படைத்தான்.கலைக்கல்லூரிக்கக் கீழ்த்திசைக் கல்லூரியில் இடம்தரப் பெற்றது, சிறிய இடத்தில் இடநெருக்கடியால் இரண்டு கல்லூரிகளும் தொல்லைப்பட்டதை நான் நன்கு அறிவேன். (1966-70) ஆண்டுப் பகுதியில் இக்கல்லூரிகட்கு எதிரே இருந்த 'உமாமகேஸ்வர ரெட்டிகுடியிருப்பில் நான் குடும்பத்துடன் வாழ்ந்தபோதும், (1960-66) ஆண்டுப்பகுதியில் தீர்த்தக் கட்டவீதியில் சிறு அறையில் தனிமையாக வாழ்ந்தபோதும் கலைக் கல்லூரியில் பணியாற்றிய திரு. லீலாகிருஷ்ணன் திரு A, நடராசன் என்ற என் அரிய நண்பர்களைப் பார்க்க அடிக்கடிப் போய்ன்ந்து கொண்டிருந்தபடியால் கல்லூரிகள் இடநெருக்கடியால் சிரமப் பட்டதை நேரில் காணமுடிந்தது. இதனால் கலைக்கல்லூரி முதல்வர் திரு எஸ். காகய்யாவும் கீழ்த்திசைக் கல்லூரி முதல்வர் திரு சுதர்சன ஆச்சாரியாரும் என் நெருங்கிய நண்பர் களானார்கள். ஒரு சமயம்-1962இல் என நினைக்கின்றேன்பாக்காலாவிலிருந்து திரு .ே கோபாலகிருஷ்ணன் என்ற ஒருபள்ளி ஆசிரியர் பாக்காலா இருப்பூர்தி தொழிலாளர் 1. திருப்பதி-காட்டுப்பாடி இரயில்பாதையிலுள்ள ஒர் இரயில் சந்திப்பு, பாக்காலா ஒரு சிறிய ஊர். திருப்பதியிலிருந்து சுமார் 20 கி. மீ. தொலைவி லுள்ளது.