பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1&4 நினைவுக் குமிழிகள்.4 சங்கத்தில் ஒர் இலக்கியச் சொற்பொழிவிற்கு அழைத்துச் சென்றிருந்தார் . சொற்பொழிவு முடிந்து மேற்படி ஆசி யர் இல்லத்தில் இரவு உணவு கொண்டேன். அப்போது பாக்காலாவில் இருப்பூர்தி நிர்வாகத்தின் கீழ் திரு ஜகதீசன் என்ற ஒரு நலவாழ்வு ஆய்வாளர் (Railway Health.' Inspector) t isoftust si sã] oujśstrf; தமிழ்ப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் பாக்காலா இருப்பூர்திச் சந்திப்பில் பணியாற்றினர்; ஊரிலும் சில தமிழர்கள் இருந்தனர். இந்த ஊரில் ஒரு தமிழ்ச் சங்கம் இருப்பது பொருத்தம் எ பது என் மனத்தில் பட்டது. திரு. .ே கோபால கிருஷ்ணன். திரு ஜகதீசன், வேறு சில தமிழன்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் இவர்களிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்தேன் எல்லோருமே மிகஉற்சாகமாக இக்கருத்தை வரவேற்றனர். ஒரிரு திங்களில் பாக்காலாத்தமிழ்ச் சங்கம்! தோற்றுவிக்கப் பெற்றது; விரைவில் பதிவும் செய்யப் பெற்றது. இஃது எனக்கு ஒரு நல்ல இலக்கிய மேடையாகத் திகழ்ந்தது. இதன் ஆதரவின்கீழ் பல இலக்கிய விழாக்கள் நடைபெற்றன. தவத்திரு குன்றக்குடி அடிகளார்.கோவைத் தொழில் விற்பன்னர் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், எனது நண்பர் திருச்சி வழக்குரைஞர் திரு, P. அரங்கசாமி ரெட்டியார் இவர்கள் இத்தகைய விழாக்களில் கலந்து சொற் பொழிவுகள் நிகழ்த்த ஏற்பாடு செய்தேன். நானும் வாரமாத நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சித்துாரிலும் ஒரு தமிழ்ச் சங்கம் தோன்றுவதற்கு ஏற்பாடு செய்தேன். ஏகாம்பரக் குப்பம் நகரிபோன்ற இடங்களிலுள்ள திரு. பொன்னுசாமி முதலியார் போன்ற செல்வச் செழிப்புள்ள சில செங்குந்த முதவியார்களும், சித்துார், நகரத்திலுள்ள சில பல தமிழார்வலர்களும் சேர்ந்து சித்துார்த் தமிழ்ச் சங்கம்’ என்ற சங்கத்தைத் தோற்றுவித்தனர்; சங்கமும் பதிவு செய்யப் பெற்றது