பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்கு மாநிலத்தில் தமிழ்ச் சங்கங்கள் 運85 இதனை உற்சாகமாகச் செயற்படுத்துவதற்குத் தக்க செயலாளர் அமையவில்லை. பல ஆண்டுகள் பெயரளவில் சங்கம் இருந்து கொண்டு வந்தது. ஒரு சமயம் முதலாண்டு விழா-சங்கம் தோன்றிப் பல ஆண்டு கட்குப் பிறகு-மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜஸ்டிஸ் எம். எம். இஸ்மாயில் (சென்னை உயர்நீதி மன்றம்) இவ்விழாவில் கலந்து கொண்டு பேருரை ஆற்றினார். நானும் இவ்விழாவில் பங்கு கொண்டேன். சங்க உறுப்பினர்கள் யாவரும் பெருவணிகர்கள்; தம் தொழிலை விட்டுச் சில சமயம் கூட சங்க நிகழ்ச்சிகளை ஏற்படுத்த இவர்களால்முடிவதில்லை. ஆதலால்பாக்காலாத் தமிழ்ச்சங்கத்தைப் போல்இது நன்கு செயற் படவில்லை. பாக்காலாத் தமிழ்ச் சங்கத்திலுள்ள வர்கள் இருப்பூர்தித் தொழிலாளர்கள்; அலுவலர்கள். பணி நேரம் போக மாலை-இரவு நேரங்களில் சங்கக் கூட்டங் களுக்கு உடனே ஏற்பாடு செய்து விடுவார்கள். ஆசிரியர் திரு. G. கோபாலகிருஷ்ணன் நல்ல தூண்டுகோலாக இயங்கி அடிக்கடிச் சங்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து விடுவார். குன்றையொட்டிய ஓர் இடத்தில் சங்கத்திற்குச் சொந்தமாகவே கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டு விட்டது. நீண்ட நாட்களாகக் குண்டக்கல்லில் (ஓர் இருப்பூர்திச் சந்திப்பு) "குண்டக்கல் தமிழ்ச்சங்கம் நல்ல முறையில் செயற்பட்டு வந்தது. அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களும் இதில் பங்கு பெற்றிருந்ததைக் கண்டேன். இங்குக் கூட்டங்கள் நடை பெறுவதற்கு பெரிய அரங்கொன்று இருந்தது. சித்துணர்த் தமிழ்ச் சங்கத்திற்கும். பாக்காலாத் தமிழ்ச்சங்கத்திற்கும் இத்தகைய இடவசதி இல்லை. பாக்காலாவில் இருப்பூர்தி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய அரங்கு இருந்தது. இதில் பெரிய கூட்டம் நடை பெறமுடியாது. 50 பேர் இதில் கூடலாம். இந்த மூன்று சங்கங்களையும் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஏற்படுவதற்குத்