பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நினைவுக் குமிழிகள்-4 துணை புரியும் மேடைகளாகப் பயன்படுத்திக் கொண்டேன். ஒவ்வோர் இடங்கட்கும் நானே நேரில் சென்று நிர்வாக சபையைக் கூட்டச் செய்தேன்.சித்துார்த் தமிழ்ச் சங்கத்தில் பல இடங்களில் சிதறிக் கிடகத உறுப்பினர்களை ஒன்று சேர்ப்பதில் மிகவும் சிரமப்பட்டேன். ஏனைய இரு சங்க ங் களிலும் சபைகூட்டுவதில் அதிகச் சிரமம் இல்லை. திருப்பதி யிலுள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் இன்றியமையாமை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றக் செய்தேன். மேற்படி தீர்மானங்களைத் தட்டச்சு செய்யச் செய்து கடிதத்துடன் 1. தமிழக அரசு 2. தமிழ் வளர்ச்சி இயக்க 3.ஆந்திர அரசு இவர்கட்கு அனுப்பச் செய்தேன். நானே பொறுப்பேற்று அஞ்சலில் சேர்த்தேன். திருப்பதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி நிரூபர் திரு. வரதாச்சாரி இந்து நாளிதழ் நி ரூ பர் திரு. ஏ. அரங்சாமி அய்யங்கார்’ ஆகிய இருவரும் என் பணிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தனர். மூன்று சங்கங்களில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானங்களின் நகல்களை இவர்களிடம் தந்து மேற்படி இதழ்களில் எடுப்பாக இருக்குமாறு பதிப்பிக்கச் செய்தேன், திரு வேங்கடவன் பல்கலைக் கழகத்திற்கும் இந்தத் தீர்மானங் களின் நகல்கள் அனுப்பப் பெற்று வேண்டுகோள்கள் விடுக்கப் பெற்றன. குடும்பம் இல்லாது தனியாக இருந்த தால் இத்தகைய பணிகளில் பம்பரம்போல் சுழன்று செயலாற்றினேன் நான் படும் சிரமங்களை எல்லாம் வேங்கடம்மேவியமாலவன்கண்மூடிமெளனியாகப்பார்த்துக் கொண்டுதான் இருந்தான். இப்படிச் சில ஆண்டுகள் (கிட்டத்தட்டப் பத்தாண்டுகள்) சனநாயக முறைகளைக் கடைப் பிடித்துப் பொதுமக்களின் கருத்தை என் பணியில் பிரதிபலிக்கக் செய்தேன். 1. இந்த அன்பர் இப்போது இல்லை; பல ஆண்டு கட்கு முன்னரே திருநாடு அலங்கரித்து விட்டார். 2. இவரும் இன்று வைகுந்த, வாசம்.