பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்கு மாநிலத்தில் தமிழ்ச் சங்கங்கள் ፲ 8?” திருப்பதியிலேயே திருப்பதி கலாச்சாரக் கழகம்" என்ற ஒர் அமைப்பினை உருவாகச் செய்தேன்.இதில் திரு. A. நடராசன் (திருவேங்கடவன் கலைக் கல்லூரி) திரு வேங்கடாசலம் அய்யர் (ஹோட்டல் பீமா), டாக்டர் வி.வி. சீநிவாசன் (தனிப்பணியாற்றி வந்த புகழ்பெற்ற மருத்துவர்), திரு G. லீலாகிருஷ்ணன் (கோவிந்தராஜ சுவாமி கலைக்கல்லூரி), திரு. தீனதயாளன் இருப்பூர்தி அலுவலர்), திரு. கல்யாணம் அய்யங்கர் திருசொக்கலிங்கம் (ஆடிட்டர்) பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். இதில் திரு A நடராசன் செயலாளர் பொறுப்பேற்றுப் பெரும் பணி ஆற்றினார். இங்கும் நிர்வாக சபை கூடிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் இன்றியமையாமையை வற்புறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உரிய இடங்கட்டு அனுப்பப் பெற்றன. இந்தச் சீரிய பணியில் திரு . A, நடராசனின் பங்கு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பெறத் தக்கது. தமிழ்த்துறை பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட பின்னர் நான் பல கருத்தரங்கங்கள் நடைபெறச் செய்தேன். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களிலிருந்து கருத்தரங்கிற்கு வரும் பெரியோர்கட்கெல்லாம் திருப்பதி கலாச்சாரக் கழகம்’ வரவேற்பு நல்கிச்சிறப்பித்தது. வரவேற்பு அளிக்கப்பெற்ற காலத்தில் அன்றைய பெருஞ்சேற்று உதியன்சேரலாதன் பாரதப் பெரும் போர் நடை பெற்றபோது இரு சாராருக்கும் உணவு அளித்தது போல் சேரநாட்டைச் சார்ந்த திருவேங்கடாசலம் அய்யர் (ஹோட்டல் பீமா). விருந்தளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. குறிப்பிடத்தக்கது.