பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-179 25. உருதுத்துறை ஆசிரியரின் மோதல் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பெயர் அளவுக்கு உள்ள தமிழ்த் துறையும், அடிப்படையில் நன்கு அமைந்த உருது, அறபி. பாரசீகப் மொழித்துறையும் சந்தடியில்லாத துறைகள். தமிழ்த் துறையிலாவது மருந்துக்கென்று ஒரு மாணாக்கனோ, மாணாக்கியோ இருப்பது உண்டு. உருதுத் துறையில் சில ஆண்டுகள் மருந்துக்கும் மாணாக்கர் ஒருவர் கூட இருப்பதில்லை. உருதுத் துறை அனந்தபூருக்குதான் சரியான துறை. முஸ்லீம்கள் அப்பகுதியில்தான் அதிகம்; பல்கலைக் கழக மையம் அங்கு ஏற்பட்ட பிறகாவது உருதுத் துறையை அங்கு மாற்றியிருக்கலாம்.பல்கலைக் கழகத்தின் சிந்தனை ஏனோ இதில் செல்லவில்லை. இடநெருக்கடி காரணமாக அடிக்கடி இட மாற்றம் செய்யப்படும் துறைகள் தமிழ்த் துறையும் உருதுத் துறையுமே ஆகும். காரணம். இரண்டிலும் ஆசிரியர்களும் குறைவு: மாணாக்கர்களும் அரியர். இவர்கட்குத் தனி வகுப்பறைகள் தேவை இல்லை; காரணம், மாணாக்கர்கள் இருப்பதில்லை. ஒரிருவர் இருந்தாலும் இளமாக்காவிலோ, ஆடுகளத்திலுள்ள ஒரு பெரிய மரத்தடி நிழலிலோ அல்லது ஆசிரியர் இருக்கும் அறையிலோ வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம். பேராசிரியர் நயினார் காலமான ஒராண்டுக் காலத்திற் குள்ளே டாக்டர் அகமது துணைப் பேராசிரியரானதையும் இதனால் இவருக்குத் தலைக்கணம் ஏறியதையும் குறிப்