பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருதுத்துறை ஆசிரியரின் மோதல் 夏8莎 பிட்டேன் அல்லவா? இந்நிலையில் வேறு இடம் இல்லா மையால் என் அறையில் இடம் கொடுக்கப்பெற்றது. நான் நூலகத்திற்குச் சென்றிருந்த பொழுது, டாக்டர் அகமது எனக்குள்ள நாற்காலி, மேசை, இரும்பு பீரோ இவற்றை அறையின் கீழ்க்கோடியில் ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டுத் தனக்கு நானிருந்த இடத்தில் இடம் போட்டுக் கொண்டார். என் தலைக்குமேல் சுழன்று கொண்டிருந்த * மின்விசிறி'தான் அவரை இவ்வாறு செய்யத் தூண்டியது என்பது வெளிப்படை. அவ்வறையில் வேறு விசிறி இல்லை. அப்பொழுது அவர் துறையில் வேறு விரிவுரையாளர்கள் நியமனம் பெறவில்லை. நான் நூலகத்திலிருந்து திரும்பீ வந்த பொழுது என் அறையில் நடைபெற்றிருந்த பிரளயத்தைக் கண்டேன். மனக்கொந்தளிப்பு கொள் ளாமல் அமைதியாக டாக்டர் அகமது, ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? அதுவும் என் அநுமதியின்றி இப்படிச் செய்யலாமா?’ என்று கேட்டேன். துணைப் பேராசிரியர் (Reader) என்ற தலைக்கணம் அவரைப் படபடக்கச் செய்தது. மிஸ்டர் ரெட்டியார், இந்த அறையை முதல்வர் எனக்கு ஒதுக்கீடு செய்தார்; ஆதலால் இந்த அறை எனக்குரியது. என் விருப்பப்படி நான் இடபகுதி களைப் பிரித்துக் கொண்டேன். உங்கட்கு அதோ அந்த மூலையில் இடம் அமைத்துத் தந்துள்ளேன். அங்கு போய் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றார். டாக்டர் அகமது, உங்கட்கு இந்த அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது உண்மை என்பதை நீங்கள் இங்கு வந்ததிலிருந்தே அறிகின்றேன். ஆனால், நான் இருக்கை அமைத்துக் கொண்டிருந்ததி லிருந்தே எனக்கும் இந்த அறை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தங்கட்குப் புரியவில்லையே முதலில் இந்த அறை எனக்கு ஒதுக்கப்பட்டுப் பல திங்களாக இதில் இருந்து வருகின்றேன். இன்று இதே அறை உங்கட்கு ஒதுக்கப்பட்டு நீங்கள் வருகின்றீர்கள். இருவருக்கும் இந்த அறை உரியது என்பது தெளிவு. நீங்களும் இந்த அறையில் தங்கலாம் என்பதற்குத் தடை இல்லை. ஆனால் நான்