பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

釁90 நினைவுக் குமிழிகள்.4 அமர்ந்திருந்த இடத்தை மாற்றிக் கொள்ளவும் உங்கள் விருப்பப்படி இடப்பகுதிகளை அமைத்துக் கொள்ளலாம் என்று பல்கலைக் கழகமோ முதல்வரோ சொல்ல வில்லையே' என்றேன். அவர் அப்படித்தான் செய்வேன், அது என் விருப்பம். நான் துறைத்தலைவர் துணைப் பேராசிரியர்' என்று அகம்பாவத்துடன் பேசினார். "இப்படித்தான் பாகிஸ்தானியரும் சீனரும் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்க வேண்டும்: அடாவடித்தன Lafrö ஆக்கிரமித்திருக்க வேண்டும்' என்பது எனக்குப் புரிந்தது. ஆற்றின் மேற்பகுதியிலிருந்த ஒநாய் அதன் கீழ்ப் பகுதியிலிருந்த ஒர் ஆட்டுக்குட்டியைப் பார்த்துப் பேசுவது போலிருந்தது. ஆட்டுக்குட்டியும் ஓநாயின் சொரூபத்தை மேற்கொண்டால் இருவரிடையேயும் மோதல்’ நிகழும். ஆனால் ஆட்டுக்குட்டிக்கு ஒநாயின் சொரூபம் வர முடியாது. ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டிதான்: ஒநாய் ஒநாய்தான்." ஒன்றன் இயல்பு பிறிதொன்றற்கு ஒருகாலும் வரமுடியாது என் நிலை ஆட்டுக்குட்டியின் நிலை. இப்படித்தான் இப்பரந்த உலகில் அடாவடித் தனங்கள் நடைபெற்று வருகின்றனவோ? இதற்குக் கழுவாய் இருக்காதோ? இப்படியெல்லாம் என் சிறு மனம்’ இந்திக்கத் தொடங்கியது. முட்டாள் நாய்க்கனும் முரட்டுத் துலுக்கனும்: மோதிக் கொண்டால் முட்டாள் நாய்க் கனுக்குத்தான் கஷ்டம் வரும். எது இல்லாவிட்டாலும் அடி விழும் என்பது மட்டிலும் உறுதி. ஆனால், நான் முட்டாள் நாய்க்கன் இல்லை; அறிவும் சிந்தனையுமுள்ள தமிழன்! தமிழ்த்துறையில் பணியாற்றுபவன். அப்பொழுது முதல்வராக இருந்தவர் டாக்டர் பம்பாபதிராவ் நேராக அவரிடம் சென்று அடாவடியாக என் அறையில் இடம் மாற்றம் செய்தததையும் உருதுத் துணைப் பேராசிரியர் தன் முனைப்பாகப் பேசுவதையும் எடுத்துக் கூறி மோதலைத் தவிர்ப்பதற்காகவே முறையீடு