பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருதுத் துறை ஆசிரியரின் மோதல் I 91 செய்வதற்கு வந்திருப்பதாகக் கூறினேன். உடனே அவர் ஏவலர் ஒருவரை அனுப்பி உருதுத் துணைப் பேராசிரி யரைக் கூட்டிவரச் சொன்னார். அவரும் வந்தார். என்னையும் முதல்வர் அறையில் பார்த்தபொழுது நிமிர்ந்து நின்ற முகம் இறங்கிப் போயிற்று; சிறிது நடுக்க மும் காணப்பட்டது. தான் செய்த அடாவடித்தனத்திற்கு வருந்தியிருக்க வேண்டும் என்று எனக்குப் படுகின்றது. இல்லாவிடில் இயல்பிலேயே முரட்டுத்தனம் உள்ளவருக்கு இப்படி நடுக்கம் ஏற்படக் காரணம் இல்லை. முதல்வர் அமரச் சொல்லி புன்முறுவலுடன் நான் உங்கட்கு அறை ஏற்பாடு செய்தேன். ஏற்கெனவே மிஸ்டர் ரெட்டியார் அந்த அறையில் இருப்பது தெரியும். வேறு இடம் இல்லாமையாலும், பெரிய அறையாக இருப் பதாலும், இரண்டு துறைகளிலும் மாணாக்கர்கள் அதிகம் இல்லாமையாலும், உங்கட்கு அந்த அறை தந்தேன். நீங்கள் போய் ஏதாவது ஒரிடத்தில் இருக்கை வசதி செய்து கொண்டு அமர்வதுதான் முறை. அப்படியிருக்க மிஸ்டர் ரெட்டியாரின் நாற்காலி மேசை, பீரோ முதலிய வற்றை ஏன் அகற்றினிர்கள்?’ என்று கேட்டார். இதற்கு உருது ஆசிரியர் சொன்னது: "நீங்கள் எனக்கு அந்த அறையைத் தந்தீர்கள். ஒரே ஒரு மின்விசிறி தான் அந்த அறையில் பொருத்தப் பெற்றிருந்தது. அதன் கீழ்தான் மிஸ்டர் ரெட்டியாரின் இருக்கை வசதிகள் இருந்தன. எனக்கு மின்விசிறி இல்லாததால் நான் அவருக் கிருந்த வசதிகளை மாற்றிப் போட்டு விட்டு எனக்கு அந்த இடத்தில் வசதிகள் செய்து கொண்டேன். நான் துணைப் பேராசிரியர் (Reader): உருதுத்துறைத் தலைவர். மிஸ்டர் ரெட்டியார் சாதாரண விரிவுரையாளர் தானே என்று நினைத்து இந்த மாற்றங்களைச் செய்து கொண்டேன்’ என்று மறுமொழி பகர்ந்தார்.