பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9.2 நினைவுக் குமிழிகள்-4 முதல்வர், டாக்டர் அகமது, ஏற்கெனவே மிஸ்டர் ரெட்டியார் அங்கிருந்தார். ஒரே மின் விசிறியிருந்தமை யால் அதன்கீழ்த் தம் இருக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொண்டார். நீங்கள் அதே அறையில் பிறிதோர் இடத்தில். அமர்வதுதான் முறை மின் விசிறியில்லான்மயை என் கவனத்திற்குக் கொணர்ந்து விசிறிக்கு ஏற்பாடு செய்து கொள்வதுதான் முறை. நானும் ஏற்பாடு செய்து தருவேன். நீங்கள் நடந்து கொண்டது தான்றோன்றித் தனம் (High-handed) ஆகும்’ என்று கூறி, உடனே நீங்கள் பழைய படியே அவர் இருந்த இடத்திலேயே இருக்கை வசதிகளைத் திரும்பவும் செய்து கொடுக்க வேண்டும். நீங்கள் ஏதாவது ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த இடத்தில் உங்கட்கு வசதிகளைச் செய்து, கொள்ள வேண்டும்’ என்று சற்றுக் கடுமையாகவே சொல்லிவிட்டார். மேலும் தொடர்ந்து, 'துணைப்பேராசிரியருக்குக் காற்று வேண்டும்; விரிவுரையாளருக்குக் காற்று வேண்டா என்று நினைப்பது தவறு என்பதை உணர்கின்றீர்களா? உங்கட்கு எந்த இடத்தில் அமர்வது என்று தெரியா விட்டால் நான் நேரில் வந்து காட்டட்டுமா? அல்லது. கிடைப்படம் (Plan) ஒன்று வரைந்து உங்கள் இருப் பிடத்தைக் குறித்துக் காட்டட்டுமா? அல்லது அலுவலக மேலாளரை அனுப்பி உங்கட்கு ஆற்றுப்படுத்தட்டுமா? : என்று மேலும் கடுமையாகவே பேசினார். டாக்டர் அகமது, நீங்கள் துறைத் தலைவர் என்ற தலைக்கணத் துடன் செயற்பட்டு மிஸ்டர் ரெட்டியாருக்குத் தீங்கு ஏதாவது விளைவித்தால் நான் உங்கள் தலைமைப் பொறுப்பை மாற்றி நானே உங்கள் துறைத் தலைமைப் பொறுப்பை மேற்கொண்டு விடுவேன். நீங்கள் துணைப் பேராசிரியரேயன்றி பேராசிரியர் அல்லர் என்பது நினைவிருக்கட்டும். இதனால் நீங்கள் பணித்துறை சார்பாக (Ex-officio) பல்கலைக்கழகப் பேரவை