பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருதுத்துறை ஆசிரியரின் மோதல் 1 93 உறுப்பினர், கல்விமன்ற உறுப்பினர் போன்ற சலுகைகளை யெல்லாம் இழக்க நேரிடும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்' என்றும் எச்சரித்தார். டாக்டர் அகமதுவின் முகத்தில் ஈயாடவில்லை. முகம் சுருங்கி மெளனியானார்; பேச்சு எழவில்லை. பின்னர் அறைக்குச் சென்று என் இருக்கை வசதிகளைப் பழைய படியே மாற்றியமைத்தார். எனக்குப் புதிதாகப் போட்ட இடத்திலேயே தனக்குப் போட்டுக் கொண்டார், டாக்டர் அகமது ஒரு விநோதமான மனிதர்; வெகுளி. நல்லவர்தான்; வல்லவர் இல்லை. புலமை போதாது என்று பேராசிரியர் நயினார் சொல்லக் கேட்டிருக்கின்றேன். பேராசிரியர் நயினார் வருவதற்கு முன் ஒரு சமயம் பலர் ஓரிடத்தில் ஏதோ காரணமாக நின்று கொண்டிருந்த பொழுது துணைவேந்தர் நாயுடு அவர்களும் அங்கிருந்தார். துணைவேந்தர் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவார். தான் துணைவேந்தர்' என்ற தன்முனைப்பே இல்லாதவர்; தலைக்கணம் இவரிடம் இருந்ததை நான் பார்த்ததில்லை. இப்படி எல்லோரிடமும் புரையறக் கலந்து பழகினமையால் ஒவ்வொருவரின் திறமைகளையும், உணர்வுகளையும், தனிச்சிறப்புப் பண்புகளையும் (Idio eyncrasy) நன்கு அறிந்து வைத்திருந்தவர். திடீரென்று டாக்டர் அகமதுவைக் கேட்டார்: 'பி. ஏ. பி. எஸ் சி. வகுப்புகளில் மாணவர்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும். எம். ஏ. யிலாவது ஒரிருவர் சேர்ந்துள்ளனரா?' என்று. டாக்டர் அகமது அளித்த மறுமொழி: "ஒரே ஒரு மாணவி சேர்ந்திருக்கின்றாள். நான் அவளால் திருப்தி sysol &s; G spor (I am satisfied with her).” arcărugsrs. எல்லோரும் நகைத்தனர். ஏன் நகைத்தனர்? என்று கூட அவரால் அறிந்து கொள்ளக் கூடவில்லை. துணைவேந் தரும் சிரித்துக்கொண்டு வாளா இருந்து விட்டார். பின்னர் டாக்டர் அகமது அங்கிருந்த ஒரு சிலரைத் தனித் தனியாக நி-13