பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈9强 நினைவக் குமிழிகள்.4 சிரித்ததன் காரணத்தை வினவ, அவர்கள் அவர் கையாண்ட ஆங்கில மொழியிலுள்ள குறையை எடுத்துக் காட்டி அதன் விபரீதப் பொருளை விளக்கினதாக அறிந் தேன். அதன் பிறகு அவர் பேராசிரியராகவும் உயர்த்தப் பெற்றார். மூன்று விரிவுரையாளர்களும் வந்து சேர்ந்தனர். மூன்று மொழிகள் உள்ள துறையாதலால், உருதுக்கு ஒருவரும் அறபிக்கு ஒருவரும், பாரசீகத்திற்கு ஒருவருமா நியமனப் பெற்றனர். யான் திருப்பதியில் பணியேற்ற இரண்டாண்டுக் காலத்தில் பி. ஏ., பி. எஸ்சி வகுப்புகளில் இருமாணாக்கர் கள் சேர்ந்ததாக நினைவு. அப்பொழுது உருது படிப் பதற்கும் ஒருவர் சேர்ந்திருந்தார். ஆனால் உருதுத் துறை யில் இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். டாக்டர் அகமது அத்துறையில் நிரந்தரமானவர். துணைவேந்தர் நாயுடு அவர்கள் சென்னையிலிருந்தவராதலால் யாராவது 58 அகவையில் ஒய்வு பெற்றவர் கிடைத்தால் அவர் தயவில் உருது, அறபி மொழிகளுக்கு இரண்டாண்டு தற்காலிகமாக நியமனம் பெற்று வந்து சேர்ந்துவிடுவர். பெரும்பாலும் இவர்கள் சென்னை மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி யாசிரியர்களாகவே இருப்பர். பல இடங்களில் கல்லூரி முதல்வராக இருந்தவர் ஒருவர் கூட வந்து சேர்ந்தார். அவர் பெயர் திரு. ஃபஸ்லுல்லா என்பது. பேராசிரியர் நயினாரைப் போலவே இவரும் என்னுடன் நன்கு பழகுவார். இரண்டாண்டுகள் விரிவுரையாளராகவும் மூன்றாண்டுகள் பல்கலைக்கழக மானிய நிறுவனத்தின் கீழ் உதவி பெற்றும் ஆய்வாளராகவும் பணியாற்றினார். பேராசிரியர் டி. ஏ. புருடோத்தம் முதல்வராக இருந்த காலம். இக்காலத்தில்தான் இரண்டு பாட நூல்களில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக இரண்டு மேசைப் படிகள்” (Table copies) வேண்டுமென்று கடிதம் ஒன்று முதல்வருக்கு அனுப்பினார். அதில் (copies) என்ற ஆங்கிலச் சொல்லை (coppies) என்று எழுதிவிட்டார். பேராசிரியர்