பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருதுத்துறை ஆசிரியரின் மோதல் 運95 புருடோத்தம் நகைச்சுவை மிக்கவர். அவர் சொ னாராம் யாரோ ஒருவரிடத்தில் 'இங்கே பாருங்கள். இரண்டு படிகள் வேண்டும் என்று கோரி எழுதிய கடிதத்தில் (coppies) என்று இரண்டு P போட்டிருக்கின்றார். மூன்று படிகள் தேவையாக இருந்திருப்பின் மூன்று P' போட்டிருப்பார் போலும்!’’ என்று. பல்கலைக் கழக வளாகத்தில் இந்நிகழ்ச்சியை ஓராண்டுக் காலம் எல்லோருமே பேசிக் கொண்டு மகிழ்வார்கள். கால வெள்ளம் இந்நினைவையே அடித்துக் கொண்டு சென்று விட்டது. இவர்தம் இல்லறவாழ்க்கை சரியாக அமையாதது இவருக்கு ஏற்பட்ட பெருங்குறை. என்னோடு டாக்டர் அகமதுவுக்கு "மோதல் ஏற்பட்டாலும் நான் அதனை மறந்தேன்; நாளடைவில் அவரும் மறந்தார், இருவரும் நல்ல நண்பர்களாணோம். நாங்கள் இருவரும் சந்திக்கும் போதெல்லாம் அவர் முதலில் சலாம்’ போடுவார். இருவரும் கைகுலுக்கிக் கொள்வோம். உருதுத்துறையில் எல்லா ஆசிரியர்களும் என்னிடம் அன்பாகத்தான் பழகி வந்தனர். தொடக்கக் காலத்தில் பேராசிரியர் நயினார் இருக்கும்போது வந்து சேர்ந்த ஒய்வு பெற்ற அறபு மொழிப் பேராசிரியர் (முதல்வர்) திரு .பஸ்லுல்லா சங்கிலித் தொடர்போல் சார்மினார் சிறு சுருட்டைப் (Cigarette) புகைப்பவர் என்னிடம் மிகக் குழைந்து பழகுவார் அவர் தமிழ் பேசுபவராதலால் தமிழ்மொழி எங்களிருவரையும் நன்கு பிணைத்தது. இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடத்தக்க செய்திகள் இல்லை என்றாலும், ஒர் அறபுக் கவிஞரின் கற்பனையைப் பற்றி இவர் குறிப்பிட்டது இன்றும் என் மனத்தில் பசுமை யாகவே உள்ளது. வண்ணப்படமெழுதும் ஒவியர் ஒருவர் குதிரைமேல் இவர்ந்து செல்லும் நவாப்புப் படம் ஒன்றை வரைந்து நவாப்பைச் சன்மானம் பெறுவதற்காகப் பேட்டி கண்டாராம். அப்போது அவரிடம் படத்திலுள்ள தாங்கள் இவர்ந்து செல்லும் குதிரையின்மீது என் வண்ணத்