பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 96 நினைவுக் குமிழிகள்-4 துரிகை தடவும் போது தங்கள் உருவம் விண்ணில் பாய்ந்: தோடுகின்றது' என்று கூறிப் பெரும் பரிசு பெற்றாராம் என்பது. இந்த நண்பர் இப்பொழுது எங்கு சென்றார். என்பது அறியக்கூடவில்லை; இறைவனுலகம் சென்று விட் டார் என்பதை அண்மையில் அறிந்தேன்; வருந்தினேன்! குமிழி-182. 26. தமிழக அரசு மானியம் பெறுவதில் தீவிர முயற்சி பரிசீலனை செய்து திருவேங்கடவன் பல்கலைக் ملكا கழகதத் ற்கு மானியம் வழங்க வேண்டும் என்ற விண்ணப்பம் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழக அரசுக்குச் சென்று விட்டது என்று எண்ணி நான் வாளா இருக்க வில்லை. சூடு கண்ட பூனையல்லவா? இதற்கு முன்னர் அனுப்பிய விண்ணப்பத்தைத் தொடர்ந்து பலமுறை சென்னை சென்று தலைமைச் செயலகத்தில் வட்ட மிட்ட தும், சமயம் நேர்ந்த பொழுதெல்லாம் சென்னை சென்று முயன்றதும் குன்றின்மீது 'கண்மூடி மெளனியாக' நிற்கும் ஏழுமலையான் அறியாததன்று. தானே சீமானாக இருந்தும், தேவஸ்தானத்து நிதியிலிருந்து தாராளமாக வழங்கலாம். ஆனால் தேவஸ்தானத்தை. நானே நேரில் நெருங்குவதற்கு அவன் வழி வகுக்கவில்லை. 1. நெடியோன் நெற்றியில் தீட்டப் பெற்றுள்ள திருமண் காப்பு கண்ணை மறைக்கும் வரை இறங்கியிருத்தலையும், அர்ச்சையில் எம்பெருமா னின் பேசாத நிலையையும் குறிப்பிட்டவாறு.