பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெறுவதில் தீவிர முயற்சி 19 7 பல்கலைக் கழக வளர்ச்சிக்கென்று முதலில் ஆண்டொன் றுக்கு மூன்று இலட்ச ரூபாயும் சில ஆண்டுகள் கழித்து ஆண்டொன்றுக்கு ஆறு இலட்சம் ரூபாயும் இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஆண்டொன்றுக்குப் பத்து இலட்சம் ரூபாயுமாக வழங்கி வருகின்றான். அதில் ஆண்டொன் றுக்கு எழுபத்தைந்து ஆயிரம் ரூபர்ய் வீதம் தமிழ் வளர்ச் சிக்கு ஒதுக்கீடு செய்யலாம். செய்தால் தானே? தமிழக அரசு ஆணை சாதகமாக இல்லையென்று தெரிந்ததும் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் தேவஸ்தான ஆட்சிக் குழுவின் தலைவ ரும், நிர்வாக அதிகாரியும் இதில் தலையிட்டிருக்கலாம்: தலையிடுமாறு அவர்கள் உள்ளத்தில் அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமான் அவர்களைத் தூண்டியிருக்கலாம்: இப்படியெல்லாம் அவன் செய்யவில்லை. ஆனால் அவன் என்னைத்தான் தூண்டுகின்றான்; என் பொறுமையைச் சோதிக்கின்றான். இவன் உண்மை யான தமிழன்பன்- தமிழ் வெறியன் -என்பதை உலகிற்கு உணர்த்த நினைக்கின்றான். தொண்டரடிப் பொடியாழ் வாரின் பக்தியை உலகினருக்குணர்த்துவான் வேண்டி ஒரு அந்தணனாகிப் பொன் வட்டிலை மறைத்துக்கொண்டது போலவும், திருமங்கையாழ்வாரின் பக்தியை உலகினர்க் குணர்த்த மணமக்கள் வடிவத்தில் வந்து வழிப்பறிக் கொள்ளை செய்யும் ஆழ்வாரிடம் மாட்டிக் கொண்டது போலவும் செய்யாவிடினும் என்னை அதிக அலைச்சலுக்கு உட்படுத்தித் தமிழக அரசை அணுகச் செய்தான். பணத்தைக் குவித்துக் கொண்டிருப்பவன் அல்லவா? நான் திருப்பதியிலிருந்து கொண்டு பல்கலைக் கழக கி கடிதத்தைத் தொடர்ந்து தமிழ்கஅரசுக்குப் பல கடிதங்கள் எழுதினேன். பல தடவைகள் நேரில் வந்து முதலமைச்சர் அறிஞர் அண்ணாவைப் பார்க்க முயன்றேன். ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு தடையினால் பார்க்க முடிவ